தயங்கிய திரிஷா, அதற்கு சம்மதிக்க வைத்த விஜய்.. இயக்குனர் ஓபன் டாக்
சமீப காலமாக விஜய் திரிஷா பற்றிய சர்ச்சை தான் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது. விஜய்யின் பிறந்த நாளுக்கு இருவரும் தனியாக லிப்டில் இருக்கும் புகைப்படம் பகிர்ந்து வாழ்த்து தெரிவித்திருந்தார்.
ஏற்கனவே விஜய்க்கும் திரிஷாவுக்கும் இடையே ஏதோ சம்திங் சம்திங் இருப்பதாக இணையத்தில் தகவல்கள் வெளிவந்தது இதற்கிடையில் இந்த ஒரு புகைப்படம் மீண்டும் அந்த சர்ச்சையை பெரிதாக்கி இருக்கிறது .
இந்நிலையில் இயக்குனர் பேரரசு திருப்பாச்சி படத்தில் ஏற்பட்ட அனுபவத்தை பேட்டி ஒன்றில் பகிர்ந்துள்ளார். அதில் அவர், திருப்பாச்சி படத்தில் இடம் பெற்றுள்ள ஒரு காட்சியில் விஜய்யை திரிஷா வாடா போடா என கூப்பிடுவது போல நடிக்க வேண்டும்.
ஆனால் அந்த காட்சியில் விஜய்யிடம் அப்படி பேச திரிஷா தயங்கினார். ஆனால் அப்படி சொன்னால் காட்சி நன்றாக இருக்கும் என்பதால் விஜய் திரிஷாவிடம் சொல்லி சம்மதிக்க வைத்தார் என்று பேரரசு கூறியுள்ளார்.