தடுப்பூசி போட்டதால் தான் மாரடைப்பா? மறைந்த விவேக் மரணத்தில் மர்மம் இருப்பதாக புகார்

death vivek coronavaccine nhrc
By Edward Aug 25, 2021 09:23 AM GMT
Report

தமிழ் சினிமாவில் சின்ன கலைவாணர் என்று ரசிகர்களால் அழைக்கப்படுபவர் நடிகர் விவேக். காமெடி நடிகர் அல்லாது நடிப்பில் கதாநாயகனாகவும் சமுக ஆர்வலராகவும் திகழ்ந்து வந்தார். கடந்த ஏப்ரல் மாதம் 17ல் மாரடைப்பு காரணமாக மரணமடைந்தார். ஒட்டுமொத்த தமிழகத்தையும் அதிரவைத்து இந்த செய்தி சில சர்ச்சையை ஏற்படுத்தியது.

மரணத்திற்கு இரு நாட்களுக்கு முன் தடுப்பூசி போட்டுவிட்டு விழிப்புணர்வு செய்தார். மாரடைப்பால் இறந்ததற்கு தடுப்பூசி போட்டதால் தான் இப்படி நடந்தது என்று கூறி செய்திகள் பரவியது. இதுகுறித்து அப்போதைய சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தவறான செய்தி அதற்கும் விவேக் மரணத்திற்கும் தொடர்பில்லை என்று கூறி பேட்டியளித்தார்.

இந்நிலையில், விவேக் தடுப்பூசி போட்டுகொண்டதால் தான் இறந்தார் என்று இது தொடர்பாக உரிய விசாரணை நடத்தவேண்டும். அவர் மரணத்தில் மர்மம் இருக்கிறது என்றும் கூறி விழுப்புரத்தை சேர்ந்த சமுக ஆர்வலர் தேசிய மனித உரிமை ஆணைத்தில் மனு அளித்த நிலையில் தற்போது விசாரணைக்கு எடுத்து கொண்டுள்ளது தேசிய மனித உரிமை ஆணையம்.