திரும்ப வந்துறாத..தவெகவில் இணைந்த காங்கிரஸை வெச்சு செய்யும் நெட்டிசன்கள்!! மீம்ஸ்

Indian National Congress Tamil Memes Thamizhaga Vetri Kazhagam TVK
By Jai May 06, 2026 12:45 PM GMT
Report

2026 தமிழ்நாடு சட்டசபை தேர்தலுக்கு முன் தவெக தலைவர் விஜய், காங்கிரஸ் கட்சியை கூட்டணிக்கு அழைத்ததாக தகவல் வெளியானது. அப்போது கூட்டணி செல்லவே டெல்லி நிர்வாகிகள் ஆர்வம் காட்டினார்கள்.

திரும்ப வந்துறாத..தவெகவில் இணைந்த காங்கிரஸை வெச்சு செய்யும் நெட்டிசன்கள்!! மீம்ஸ் | Please Dont Come Back Dmk Cadres Troll Congress

அதேநேரம் தமிழக நிர்வாகிகள் தயக்கம் காட்டினாலும் திமுக தலைவர் ஸ்டாலினிடம் அதிக இடங்கள் கேட்டு பெற விஜய்யை பயன்படுத்தினார்கள். இப்போது வெற்றிப்பெற்ற மறுநாளே தவெக பக்கம் சாய்ந்தேவிட்டார்கள்.

ஆட்சியமைக்க விஜய்க்கு இன்னும் 10 இடங்கள் தேவைப்படும் நிலையில், மற்ற கூட்டணி கட்சி எம் எல் ஏக்களை அழைத்து வரும் முயற்சி நடந்து வருகிறது.

காங்கிரஸ்

இந்நிலையில் காங்கிரஸ் திமுகவை ஒதுக்கி தற்போது விஜய்யின் தவெகவிற்கு ஆதரவு தெரிவித்து கூட்டணி ஆட்சியில் பங்கேற்க முதல் ஆளாக பனையூர் சென்றுவிட்டார்கள்.

திரும்ப வந்துறாத..தவெகவில் இணைந்த காங்கிரஸை வெச்சு செய்யும் நெட்டிசன்கள்!! மீம்ஸ் | Please Dont Come Back Dmk Cadres Troll Congress

இதனை பச்சை துரோகம் என்று திமுகவினர் பலரும் விமர்சித்து வருகிறார்கள். பல வருடங்களாக முதுகில் ஏறி சவாரி செய்த காங்கிரஸ், இப்போது முதுகில் ஏறி அதுவும் ஜெயித்த அன்றே முதுகில் குத்தியிருக்கிறது என்று வேதனை தெரிவித்து வருகிறார்கள்.

இதனை வைத்து நெட்டிசன்கள் காங்கிரஸை கலாய்த்து மீம்ஸ் புகைப்படங்கள் வீடியோக்களை பகிர்ந்து வருகிறார்கள்.

GalleryGallery