திருமணம் செய்த ஒரு வருடத்தில் இப்படியா!! விக்னேஷ் சிவன் குடும்பத்தால் மாட்டித் தவிக்கும் நயன் தாரா..
தென்னிந்திய லேடி சூப்பர் ஸ்டாராக திகழ்ந்து வரும் நடிகை நயன் தாரா, கடந்த 2022 ஆம் ஆண்டு ஜூன் 9 ஆம் தேதி விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணமாகிய சில மாதங்களில் பல பிரச்சனைகளை சந்தித்து அதிலிருந்து மீண்டு தன் இரட்டை குழந்தைகளுடன் ஒரு வருட திருமண நாளை கொண்டாடினர். இந்நிலையில் விக்னேஷ் சிவன் குடும்பத்தினராக் நயன் தாராவுக்கு வேறொரு முக்கிய பிரச்சனை எழுந்துள்ளது.
நயன் தாராவின் மாமனார் சொத்துக்களை ஏமாற்றி எழுதி வாங்கியுள்ளார் என்ற பிரச்சனை தான் தற்போது பரப்பாக பேசப்பட்டு வருகிறது. அதாவது, விக்னேஷ் சிவனின் தந்தை மறைந்த சிவக்கொழுந்து போலிஸ் கண்காணிப்பாளராக இருந்த போது தங்களின் சொத்தை ஏமாற்றிவிட்டதாக அவர்களின் உறவினர்கள் போலிஸில் புகாரளித்துள்ளனர்.
லால்குடி டிஎஸ்பி அலுவலகத்தில் விக்னேஷ் சிவனின் பெரியப்பா குஞ்சிதபாதம், பெரியப்பா மாணிக்கம் உள்ளிட்ட சிலர், தனக்கு உடல் நிலை சரியில்லை. இதயத்தில் பிரச்சனை இருந்ததால், உதவி கேட்க மாணிக்கத்திடம் கேட்டதாக கூறியுள்ளார் குஞ்சிதபாதம்.
தற்போது சொத்தில் வில்லங்கம் உள்ளதால் விற்க முடியாத நிலை இருப்பதாகவும். அப்படி சொத்தை விற்க வேண்டும் என்றால் விக்னேஷ் சிவன் மற்றும் அவரது தாயார் அதை தீர்க்க வேண்டும் என்று கூறியுள்ளார் மாணிக்கம். ஏற்கனவே சிவக்கொழுந்து முறைகேடாக சொத்தை விற்று அண்ணன்கள் மற்றும் தம்பிகளை ஏமாற்றி விட்டதாகவும் கூறியுள்ளனர்.
சித்தி சரோஜா கூறிகையில், எனது கணவர் குஞ்சிதபாதம் உடல் நிலை சரியில்லாமல் இருப்பதால் எங்களுக்கு உதவ யாரும் இல்லாததால் சொத்தை மீட்டுத்தரும் படி கேட்டுள்ளார். சிவக்கொழுந்துக்கு ஒரு பங்கு மட்டுமே உரிமை இருப்பதாகவும், மற்ற 8 பேருக்கும் பங்குகள் இருக்கிறது.
இதனடிப்படையில், விக்னேஷ் சிவன், அவரது அம்மா மீனா குமார், அவரது சகோதரி ஐஸ்வர்யா, அவரது மனைவி நயன்தாரா ஆகியோர் மீது புகாரளித்துள்ளார் குஞ்சிதபாதம், மாணிக்கம். ஏற்கனவே விக்னேஷ் சிவன், நயன் தாரா திருமணத்திற்கு உறவினர்களை அழைக்கவில்லை என்ற குற்றச்சாட்டு இருந்து வந்தது. தற்போது இந்த பிரச்சனையிலும் விக்னேஷ் சிவனால் நயன் தாராவுக்கு வந்துள்ளது.