'போலீஸ்காரன் கட்டிக்கிட்டா' எப்படிப்பட்ட வரிகள்.. வீடியோவை வெச்சு செய்யும் நெட்டிசன்கள்..

Prabhu Deva Madonna Sebastian Viral Video Tamil Memes
By Edward Dec 18, 2024 06:30 AM GMT
Report

போலீஸ்காரன கட்டிக்கிட்டா

நெட்டிசன்கள் இணையத்தில் ஏதாவது ஒரு ஹாட் டாப்பிக் வந்தால் போதும் அதை வைத்து மீம்ஸ் புகைப்படங்களை கிரியேட் செய்து வைரலாக்கி விடுவார்கள். அப்படி படங்களில் இடம்பெறும் பாடல் ரிலீஸாகினால் அதில் ஏதாவது பாய்ட்டை பிடித்து கலாய்க்க ஆரம்பித்து விடுவார்கள்.

அந்தவகையில் பிரபுதேவா, மடோனா செபாஸ்டியன் நடிப்பில் உருவாகியுள்ள ஜாலியோ ஜிம்கானா படத்தின் ’போலீஸ்காரன கட்டிக்கிட்டா லத்திய வச்சு அடிப்பான், டாக்டரை கட்டிக்கிட்டா ஊசியால குத்துவான்’ என்ற பாடல் அமையும்.

இந்த பாடலை வைத்து ஏற்கனவே வேறு சில படங்களிலும் இடம்பெற்றுள்ளதை கலாய்த்து வருகிறார்கள். அதாவது மலையாள படத்தில் இடம்பெற்ற பாடலை இன்ஸ்பிரேஷனாக வைத்து ஜெகன் கவிராஜ் என்பவர் எழுதியுள்ளேன் என்று கூறியிருக்கிறார்.

நெட்டிசன்கள் வீடியோ

இந்நிலையில், 1983ல் ரஜினிகாந்த் நடிப்பில் உருவான சிவப்பு சூரியன் பாடலை போன்று இப்பாடல் இருப்பதாக நெட்டிசன்கள் கூறி தற்போது அந்த வீடியோவை ட்ரெண்ட்டாகினாலும் அப்பாடலை வைத்து நெட்டிசன்கள் கலாய்த்து வருகிறார்கள்.