விஜய் பிரச்சாரத்தில் 39 பேர் பலி.. தவெக பொதுச்செயலாளர் ஆனந்த் மீது பாய்ந்த வழக்கு!
விஜய்
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் விஜய் தற்போது அரசியலில் கவனம் செலுத்தி வருகிறார்.
இந்நிலையில், கரூரில் நேற்று அவர் பிரச்சாரம் செய்தபோது, அதில் கலந்து கொண்ட தவெக தொண்டர்கள், விஜய் ரசிகர்கள், பொதுமக்கள், குழந்தைகள் மற்றும் பெண்கள் என மொத்தம் 39 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
இந்த செய்தி மொத்த தமிழநாட்டையும் அதிர்ச்சிக்கும் வேதனைக்கும் ஆளாக்கியுள்ளது.
வழக்குப்பதிவு!
இந்நிலையில், தற்போது கரூரில் விஜய் பிரசாரத்தில் ஏற்பட்ட பிரச்சனை தொடர்பாக தவெக பொதுச்செயலாளர் ஆனந்த், நிர்மல் குமார் உட்பட 4 பேர் மீது 5 பிரிவுகளில் கரூர் நகர போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
அதாவது, BNS 105, 110, 125, 223, TNPPDL 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி, தவெக கரூர் மேற்கு மாவட்ட செயலாளர் மதியழகன் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.