என் செருப்பை விஜயகாந்த் கழுவும் காட்சி..மீட்டிங் போட்டாங்க!! நடிகர் சொன்ன சீக்ரெட்..
கேப்டன் விஜயகாந்த்
கேப்டன் விஜயகாந்த் கடந்த 2023ல் உடல்நலக்குறைவால் உயிரிழந்த சம்பவம் பலருக்கும் அதிர்ச்சியை கொடுத்தது. அவருடன் பணியாற்றிய அனுபவம் குறித்து பலரும் பேட்டிகளில் பகிர்ந்து வருகிறார்கள்.
அந்தவகையில் தவசி படத்தில் நடந்த ஒரு சம்பவத்தை நடிகர் பொன்னம்பலம் பேட்டியொன்றில் பகிர்ந்துள்ளார். தவசி படத்தில் என் செருப்பை விஜயகாந்த் கழுவுவது போன்ற காட்சி இருந்தது. அந்த ரோலுக்கு எந்த நடிகரை போடலாம் என்று டிஸ்கஷன் செய்து என்னை தேர்வு செய்தார்கள்.
கழுவும் காட்சி
அந்த காட்சி தொடர்பாக விஜயகாந்தின் ரசிகர் மன்றங்கள் எல்லாம் அவரை சந்தித்து மீட்டிங் போட்டிருக்கிறார்கள். இப்படி நான் கேள்விப்பட்டதே இல்லை.
அவரும் என்னிடம், ஆமா பொன்னம்பலம் இந்த முடிவை நான் எடுக்கல, ரசிகர் மன்றங்கள் எல்லாம் மீட்டிங் போட்டாங்க, அவங்க சொல்றது உண்மைதான் என்று விஜயகாந்த் தன்னிடம் சொன்னதாக பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.