கோடியில் சம்பளம் கொடுத்து குளிப்பாட்டிய லைக்கா!! தயாரிப்பாளருக்கு தலையில் துண்டை போட்ட மணிரத்னம்..
இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் வெளியான படம் பொன்னியின் செல்வன். 1000 கோடி வசூலிக்கும் என்று மணிரத்னம் மேல் நம்பிக்கை வைத்து லைக்கா நிறுவனம் காத்திருந்தது. ஆனால், முதல் பாகம் கடந்த ஆண்டு வெளியாகி 500 கோடிக்கும் மேல் வசூல் சாதனை படத்தது.
இரண்டாம் பாகத்தில் மற்ற 500 கோடியை எடுத்துவிடலாம் என்று பிரமோஷனுக்காக பொன்னியின் செல்வன் நடிகர் நடிகைகளை வைத்து பல கோடியில் செலவு செய்தது. தமிழ்நாட்டில் பல இடங்களுக்கு அழைத்தும் வட இந்தியாவிற்கு சென்றும் படக்குழுவினர் கோடி செலவு செய்து பிரமோஷன் செய்தனர்.
ஆனால் தயாரிப்பு நிறுவனம் எதிர்ப்பார்த்த 500 கோடி இன்றுவரை வசூலிக்கவில்லையாம் பொன்னியின் செல்வன் 2 படம். தற்போது வரை 335 கோடி மட்டுமே வசூலித்துள்ளது.
தயாரிப்புக்கு செலவு செய்த பணத்தை விட இரு மடங்கு வசூலை எடுத்து கல்லா கட்டலாம் என்று நினைத்தனர் லைக்கா நிறுவனம்.
இதில் ஐஸ்வர்யா ராய் - 10 கோடி, விக்ரம் - 12 கோடி, ஜெயம்ரவி 8 கோடி, திரிஷா - 5 கோடி, கார்த்தி 5.5 கோடி, ஐஸ்வர்யா லட்சுமி, பிரகாஷ் ராஜ், பிரபு போன்ற நட்சத்திரங்களுக்கு சுமார் 1.5 கோடி, சோபிதா, ஜெயராமுக்கு 1 கோடியும் சம்பளமாக கொடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.