பொன்னியின் செல்வன் பூங்குழலியா இது? இப்படியொரு க்யூட் புகைப்படத்தை வெளியிட்ட ஐஸ்வர்யா லட்சுமி
Aishwarya Lekshmi
Ponniyin Selvan: I
By Edward
ஐஸ்வர்யா லட்சுமி
தமிழ் சினிமாவில் மலையாள நடிகைகளின் அறிமுகம் அதிகரித்து வருகிறது. அப்படி நயன் தாரா முதல் தற்போது இருக்கும் இளம் நடிகைகள் வரை மலையாள நடிகைகளாகவே தமிழில் அறிமுகமாகி வருகிறார்கள்.
அந்தவகையில் மலையாள சினிமாவில் மாயநதி என்ற படத்தின் மூலம் பிரபலமாகியவர் நடிகை ஐஸ்வர்யா லட்சுமி.
இப்படத்தினை அடுத்து விஷாலின் ஆக்ஷன் படத்திலும், தனுஷின் ஜகமே தந்திரம் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகினார் ஐஸ்வர்யா லட்சுமி.
பூங்குழலி
இதன்பின் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வந்த ஐஸ்வர்யா லட்சுமி இயக்குனர் மணிரத்னம் இயக்கிய பொன்னியின் செல்வன் படத்தில் பூங்குழலி கதாபாத்திரத்தில் நடித்து மிகப்பெரிய வரவேற்பு பெற்றார்.
தமிழ், மலையாளம் மொழிகளில் நடித்து வரும் ஐஸ்வர்யா லட்சுமி கிளாமரில் ரசிகர்களை மிரட்டும் வகையில் சேலையில் க்யூட் புகைப்படத்தை பகிர்ந்து ஷாக் கொடுத்துள்ளார்.


