43 வயதில் இரண்டாம் திருமணம்! அஜித் பட நடிகை பூஜாவின் கணவர் இவரா?
ajith
Pooja Batra Shah
nawabshah
asai
By Edward
தமிழில் நடிகர் அஜித் நடித்த ஆசை படத்தில் சிறப்பு கதாபாத்திரத்தின் மூலம் சினிமாவில் நடிக்க ஆரம்பித்தார் அடுத்தடுத்த படங்கள் பல மொழிகளில் நடிக்க வாய்ப்பு கிடைத்து ரசிகர்களை கவர்ந்து வந்தார். 90களில் கவர்ச்சி காட்டும் நடிகைகளில் இவரும் ஒருவராக திகழ்ந்தார்.
இதையடுத்து அஜித்தின் கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன், ஒருவன் போன்ற படங்களில் நடித்து இந்தி பக்கம் திரும்பினார். இதையடுத்து சோனு என்பவரை திருமணம் செய்த பூஜா பத்ரா சில ஆண்டுகளிலேயெ விவாகரத்து பெற்று பிரிந்தார்.
விவாகரத்தாக 7 வருடமாக தனிமையில் இருந்த பூஜா பாலிவுட் நடிகர் நவாப் ஷாவை காதலித்து 2019ல் திருமணம் செய்து கொண்டார்.
கணவருடன் பீச் ஆடையில் பல புகைப்படங்களை வெளியிட்டு வந்த பூஜா உடலை கட்டுக்கோப்பாக வைக்க உடற்பயிற்சியும் யோகாவும் செய்து வருகிறார்.