நடிகை பூஜா ஹெக்டேவை வெச்சு செய்யும் முன்னணி நடிகர்கள்.. தொடர்ந்து இப்படியா ஆகணும்
இந்தியளவில் மிகவும் பிரபலமான முன்னணி கதாநாயகிகளில் ஒருவர் நடிகை பூஜா ஹெக்டே. இவர் தற்போது அதிக சம்பளம் வாங்கும் சென்சேஷன் நடிகையாக மாறியுள்ளார். அதுமட்டுமின்றி தொடர்ந்து முன்னணி நடிகர்களுடன் மட்டுமே நடித்து வருகிறார்.
அப்படி பிரபாஸ் நடிப்பில் சில மாதங்களுக்கு முன் வெளிவந்த ராதே ஷ்யாம் படத்தில் கதாநாயகியாக பூஜா நடித்திருந்தார். இப்படம் மிகப்பெரிய தோல்வியை தழுவியது. இதனை தொடர்ந்து வெளிவந்த விஜய்யின் பீஸ்ட் திரைப்படமும் பூஜாவிற்கு மாபெரும் தோல்வியை தேடி தந்துள்ளது.
மேலும், சில நாட்களுக்கு முன் ராம் சரண் மற்றும் சிரஞ்சீவியுடன் இணைந்து பூஜா நடித்து வெளிவந்த ஆச்சார்யா படமும் தோல்வியடைந்துள்ளது. இதன்முலம், பூஜாவிற்கு தொடர் தோல்வி ஏற்பட்டு வருகிறது. சென்சேஷன் நடிகையாக வலம் வரும் பூஜா ஹெக்டேவை இப்படி முன்னணி நடிகர்கள் தனது தோல்வி படங்கள் மூலம் வைத்து செய்து வருவதை நெட்டிசன்கள் பலரும் கலாய்த்து வருகிறார்கள்.