பூஜா ஹெக்டே இப்படியெல்லாம் சாப்பிடுவாரா..அலறிய தொகுப்பாளர்
Pooja Hegde
By Tony
பூஜா ஹெக்டே இன்று இந்திய சினிமாவின் முன்னணி நடிகர் என்றே சொல்லலாம். ஆம், எங்கு திரும்பினாலும் இவர் படங்கள் தான்.
தமிழில் பீஸ்ட் படம் சரி இல்லை என்றாலும், இவருக்காக அந்த படத்தை கொண்டாடினார்கள்.
தெலுங்கு, ஹிந்தி என பூஜா ஹெக்டே தற்போது கலக்கி வருகின்றார்.
இந்நிலையில் பூஜா ஹெக்டே சில நாட்களுக்கு முன்பு ஒரு பேட்டி கொடுத்துள்ளார்.
அதில் அவரிடம் நீங்கள் விரும்பி சாப்பிடும் உணவு எது என்று கேட்டனர், அதற்கு அவர் பள்ளியில் படிக்கும் போது பர்கர் விரும்பி சாப்பிடுவேன்.
அதுவும் ஒரே சமயத்தில் 10க்கு மேல் எல்லாம் சாப்பிட்டுள்ளேன் என கூற, அந்த தொகுப்பாளர் அலறிவிட்டார். மேலும், அப்படி சாப்பிட்டு எப்படி ஸ்லீம் ஆகவே உள்ளீர்கள் என்றும் கிண்டலாக அந்த தொகுப்பாளர் கேட்க, பூஜா அந்த சீக்ரெட் மட்டும் சொல்ல மறுத்துவிட்டார்.