அந்த இடத்தில் அதை குறைக்க அறுவை சிகிச்சை!! நடிகை பூஜா ஹெக்டே எடுத்த ரிஸ்க்..

Pooja Hegde Mahesh Babu Actress
By Edward Aug 30, 2023 12:00 PM GMT
Report

தமிழில் முகமூடி படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகி சரியான வரவேற்பு பெறாததால் தெலுங்கு சினிமா பக்கம் சென்றவர் நடிகை பூஜா ஹெக்டே. தெலுங்கு, இந்தி மொழிகளில் நடித்து வந்த பூஜா ஹெக்டே, அல்லு அர்ஜுடன் இரு படங்களில் நடித்து பிரபலமானாவர்.

தென்னிந்திய நடிகையாகவும் கோடியில் சம்பளம் வாங்கும் நடிகையாகவும் மாறி தமிழில் விஜய்க்கு ஜோடியாக பீஸ்ட் படத்தில் நடித்தார்.

சமீபத்தில் பிரபாஸுடன் ராதே ஷ்யாம், சிரஞ்சீவியின் ஆச்சாரியா, சல்மான் கானுடன் இந்தி படத்திலும் நடித்து போதிய வரவேற்பு பெறாமல் தோல்வியை சந்தித்தார்.

இந்நிலையில், தெலுங்கு நடிகர் மகேஷ் பாபுவுக்கு ஜோடியாக குண்டூர்காரம் என்ற படம் மற்றும் பவன் கல்யாணின் உஸ்தாத் பகத் சிங் என்ற படத்திலும் கமிட்டாகி இருந்தார். தற்போது அப்படத்தில் இருந்து பூஜா ஹெக்டே விலகி இருக்கிறார்.

அதற்கு காரணம், ராதே ஷ்யாம் படத்தில் ஒரு காட்சியின் போது ஷூட்டிங்கில் பலத்த காயம் ஏற்பட்டதாகவும் ஒரு அறுவை சிகிச்சை செய்து கொண்டதாகவும், ஆனால் அந்த வலி குறையாமல் தொடர்ந்து இருப்பதால் மீண்டும் ஒரு அறுவை சிகிச்சை செய்யவுள்ளதால் தானாம்.