திருமண கோலத்தில் விஜய் பட நடிகை பூஜா ஹெக்டே வெளியிட்ட புகைப்படம்! அடுத்து நீங்கதானா?
Beast
Pooja Hegde
By Edward
தமிழில் முகமூடி படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகியவர் நடிகை பூஜா ஹெக்டே. அப்படம் நல்ல வரவேற்பு கொடுக்காததால் தெலுங்கு பக்கம் திரும்பினார்.
குறுகிய காலக்கட்டத்தில் முன்னணி நடிகர்களுடன் நடித்து தெலுங்கு சினிமாவின் டாப் நடிகை என்ற பெயரையும் எடுத்தார். கடந்த ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பு பெற்ற வைகுண்டபுரம் படம் சூப்பர் ஹிட்டானது. இதன்பின் நடிகர் விஜய்யின் பீஸ்ட் படத்தில் நடித்தார்.
படம் தோல்வியானாலும் பூஜா ஹெக்டே தமிழ் ரசிகர் மனதை கவர்ந்தார். அவ்வப்போது க்ளாமர் போட்டோஷூட் வெளியிட்டு வந்த பூஜா ஹெக்டே தற்போது திருமண கோலத்தில் மணப்பெண்ணாக மேக்கப் போட்டு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.
நயனுக்கு பின் அடுத்த கல்யாணம் உங்களுக்கா என்று ரசிகர்கள் கேள்வி கேட்டு வருகிறார்கள்.