நடிகை பூஜா ஹெக்டேவின் தங்கச்சிகளா இது? பாசம்ன்னா இதான்ப்பா!!

Beast Pooja Hegde Indian Actress
By Edward Jul 19, 2022 07:00 PM GMT
Report

தமிழ் சினிமாவில் இயக்குனர் மிஸ்கின் இயக்கி 2010ல் வெளியான படம் முகமூடி. இப்படத்தில் நடிகர் ஜீவாவுக்கு ஜோடியாக நடித்து நடிகையாக அறிமுகமாகினார் பூஜா ஹெக்டே. இப்படம் தோல்வியில் முடிந்ததால் தமிழில் வரவேற்பு பெறமுடியாமல் தெலுங்கு பக்கம் சென்றுவிட்டார்.

அதன்பின் தெலுங்கு சினிமாவில் வாய்ப்பு கிடைக்க அடுத்தடுத்த படங்களில் நடித்து முன்னணி நடிகையாகினார். சமீபத்தில் ஆல வைகுண்டபுரமுலு படம் அல்லு அர்ஜுனுக்கு ஜோடியாக நடித்து மிகப்பெரிய வரவேற்பு பெற்றார். அதன்பின் தமிழில் பல ஆண்டுகள் கழித்து விஜய்யின் பீஸ்ட் படத்தில் கதாநாயகியாக ரீஎண்ட்ரி கொடுத்தார்.

தற்போது ஒருசில படங்களில் கமிட்டாகி நடித்து வரும் பூஜா, க்ளாமர் போட்டோஷூட் மற்றும் மாலத்தீவு புகைப்படங்களையும் வெளியிட்டு வருவார். தற்போது பூஜா ஹெக்டேவின் சகோதரிகளான அதிதி ஷெட்டி மற்றும் பூமி ஷெட்டியுடன் எடுத்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

பூஜாவுக்கே டஃப் கொடுக்கும் வகையில் அவர்களின் க்யூட் புகைப்படங்கள் இணையத்தில் பகிரப்பட்டு வருகிறது.

GalleryGalleryGalleryGallery