பிறந்தநாள் அதுவும் இப்படியா!! கடலுக்கு மேலயே படுக்கையை போட்டு மட்டையான நடிகை பூஜா ஹெக்டே!!
முகமூடி படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகி சரியான வரவேற்பு பெறாததால் தெலுங்கு சினிமா பக்கம் சென்றவர் நடிகை பூஜா ஹெக்டே.
தெலுங்கு, இந்தி மொழிகளில் நடித்து வந்த பூஜா ஹெக்டே, அல்லு அர்ஜுடன் இரு படங்களில் நடித்து பிரபலமானாவர். தென்னிந்திய நடிகையாகவும் கோடியில் சம்பளம் வாங்கும் நடிகையாகவும் மாறி தமிழில் விஜய்க்கு ஜோடியாக பீஸ்ட் படத்தில் நடித்தார்.
சமீபத்தில் பிரபாஸுடன் ராதே ஷ்யாம், சிரஞ்சீவியின் ஆச்சாரியா, சல்மான் கானுடன் இந்தி படத்திலும் நடித்து போதிய வரவேற்பு பெறாமல் தோல்வியை சந்தித்தார்.
மேலும் சமீபத்தில் திருமணம் செய்யவுள்ளார் என்ற தகவலும் வெளியானது. இடையில் காலில் அடிப்பட்டதால் மகேஷ் பாபு உள்ளிட்ட சிலர் கமிட்டாகிய படங்களில் இருந்து வெளியேறினார்.
தற்போது, பூஜா ஹெக்டே அவரது பிறந்தநாளை தோழிகளுடன் மாலத்தீவு ரெசாட்டில் கொண்டாடி வருகிறார். மாலத்தீவு கடலுக்கு மேல் படுக்கையை போட்டு படுத்துள்ள வீடியோவை பகிர்ந்துள்ளார். வாய்ப்பு தான் கிடைக்கல படுக்கையறை கூடவா கிடைக்கல என்று கிண்டலடித்து வருகிறார்கள் ரசிகர்கள்.