அடேங்கப்பா, நடிகை பூஜா ஹெக்டேவின் சொத்து இத்தனை கோடியா!! எவ்வளவு தெரியுமா

Pooja Hegde Actress Net worth
By Kathick Oct 13, 2024 12:30 PM GMT
Report

தென்னிந்திய அளவில் பிரபலமான நடிகைகளில் ஒருவர் பூஜா ஹெக்டே. இவர் நடிப்பில் தற்போது சூர்யாவின் 44 மற்றும் தளபதி 69 ஆகிய படங்கள் உருவாகி வருகிறது.

இன்று நடிகை பூஜா ஹெக்டேவின் 34வது பிறந்தநாள் என்பதினால் ரசிகர்களும், திரையுலக பிரபலங்களும் தங்களது வாழ்த்துக்களை சமூக வலைத்தளத்தில் தெரிவித்து வருகிறார்கள்.

அடேங்கப்பா, நடிகை பூஜா ஹெக்டேவின் சொத்து இத்தனை கோடியா!! எவ்வளவு தெரியுமா | Pooja Hegde Net Worth

இந்த நிலையில், பூஜா ஹெக்டேவின் சொத்து மதிப்பு குறித்து விவரம் வெளியாகியுள்ளது. அதன்படி, சினிமா மூலம் நடிகை பூஜா ஹெக்டே சேர்த்து வைத்துள்ள மொத்த சொத்து மதிப்பு மட்டுமே ரூ. 50 கோடி இருக்கும் என தகவல் வெளியாகியுள்ளது.

இவர் ஒரு திரைப்படத்தில் கதாநாயகியாக நடிக்க ரூ. 4 கோடி முதல் ரூ. 6 கோடி வரை சம்பளமாக வாங்கி வருகிறராம். பூஜா ஹெக்டேவிற்கு மும்பையில் 3BHK வீடு இருக்கிறது. இந்த வீட்டின் விலை ரூ. 6 கோடி என கூறப்படுகிறது.