என்னதான் உங்களுக்கு பிரச்சனை! சமந்தா, விஜய் கூட பூஜா ஹெக்டே கோபத்தில் இருக்கிறாரா?
தமிழ் சினிமாவில் முகமூடி படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமாகியவர் நடிகை பூஜா ஹெக்டே. அதன்பின் தமிழில் வாய்ப்பு கிடைக்காததால் தெலுங்கு பக்கம் செல்ல ஆரம்பித்தார்.
இளம் நடிகையாக இருந்த பூஜா ஹெக்டே அடுத்தடுத்த படங்களில் நடிக்க கமிட்டாகி முன்னணி நடிகை என்ற இடத்தினை பெற்றார். சமீபத்தில் அல்லு அர்ஜுனனின் ஆல வைகுண்டபுரம் படத்தில் நடித்ததன் மூலம் கோடியில் சம்பளத்தினை வாங்கி வந்தார்.
சமந்தாவுடன் பிரச்சனை:-
பூஜா ஹெக்டே தமிழ், தெலுங்கு சினிமாவில் அறிமுகமாகிய அடுத்த ஆண்டு தான் நடிகை சமந்தா சினிமாவில் அறிமுகமாகுகிறார். அப்போது இருவரும் நட்பாக பழகிய சமயத்தில் பூஜா ஹெக்டேவின் சமுகவலைத்தளம் முடக்கப்பட்டதை சமந்தா அவருடைய தோழிகளுடன் கலாய்த்து வந்தனர்.
இதையடுத்து சமுகவலைத்தளத்தில் இருவரின் ரசிகர்களும் சண்டை போட்டுக்கொண்டு பெரிதாக்கினர்.
ராதே ஷ்யாம் - பீஸ்ட்:-
இது ஒருபக்கம் இருக்க பூஜா ஹெக்டே படங்களில் நடிக்க கவனம் செலுத்து வந்தபோது ராதே ஷ்யாம் படத்தில் பிரபாஸிற்கு ஜோடியாக நடித்தார்.
சமீபத்தில் இப்படம் இரு ஆண்டுகளுக்கு பிறகு வெளியாகி கலவையான விமர்சனத்தை பெற்று வருகிறது. அதேசமயம் நடிகர் விஜய்யின் பீஸ்ட் படத்தில் முக்கிய ரோலில் கதாநாயகியாக 10 வருடங்களுக்கு பிறகு எண்ட்ரி கொடுத்துள்ளார்.
பிரபாஸுடன் பிரச்சனை:-
படத்தின் ஆரம்பத்தில் இருந்தே பிரபாஸிற்கும் பூஜா ஹெக்டேவிற்கும் சில பிரச்சனை ஓடிக்கொண்டிருக்கிறது என்றும் செய்திகள் வெளியானது. இதற்கு படக்குழு இருவருக்கு இடையே பிரச்சனை ஒன்றும் இல்லை.
இருவருமே பரஸ்பரமாகத்தான் படப்பிடிப்பில் மரியாதையுடனும் நட்பு ரீதியாகவும் ஈர்ப்பு கொண்டு வருகிறார்கள் என தெரிவித்தனர். அப்படி இருந்ததால் தான் படத்தில் ரொமான்ஸ் காட்சியில் நடிக்க முடிந்தது.
பூஜா ஹெக்டே விளக்கம்:-
பிரபல பாலிவுட் இணைத்தளத்திற்கு அளித்த பேட்டியில் பூஜா ஹெக்டே நெகடிவ் கருத்துக்களை பற்றி பகிர்ந்து பேசியுள்ளார். மக்கள் மத்தியில் நெகடிவ் செய்திகள் தான் அதிகமாக ஈர்க்கப்பட்டு வருகிறது.
அதனால் தான் என் சமுகவலைத்தளபக்கத்தில் பாசிடிவ் செய்திகளை பகிரப்பட்டு வருகிறது. நெகடிவ்வை விட்டுவிட்டு பாசிடிவ்க்கு கவனம் செலுத்த முயற்சி செய்து வருகிறேன் என்று கூறியுள்ளார்.