அப்போ தமன்னா, இப்போ பூஜா ஹெக்டே.. ரஜினியின் கூலி படத்தில் குத்து பாடல்

Rajinikanth Pooja Hegde Coolie
By Kathick Feb 27, 2025 01:30 PM GMT
Report

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் கூலி. இப்படத்தில் ரஜினியுடன் இணைந்து சத்யராஜ், ஸ்ருதி ஹாசன், நாகர்ஜுனா, உபேந்திரா மற்றும் சோப்பின் ஷபீர் ஆகியோர் நடித்து வருகிறார்கள்.

அப்போ தமன்னா, இப்போ பூஜா ஹெக்டே.. ரஜினியின் கூலி படத்தில் குத்து பாடல் | Pooja Hegde Special Song In Rajinikanth Coolie

இப்படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், பூஜா ஹெக்டே இப்படத்தில் இணைந்துள்ளதாக தகவல் வெளிவந்தது. அதுவும் ஒரே ஒரு பாடலுக்கு மட்டும் நடனமாடியுள்ளார் என கூறப்பட்டது.

இந்த நிலையில், அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளனர். ஆம், கூலி படத்தில் நடிகை பூஜா ஹெக்டே ஒரே ஒரு பாடலுக்கு நடனமாடியுள்ளார். அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை சன் பிக்சர்ஸ் வெளியிட்டுள்ளது.

அப்போ தமன்னா, இப்போ பூஜா ஹெக்டே.. ரஜினியின் கூலி படத்தில் குத்து பாடல் | Pooja Hegde Special Song In Rajinikanth Coolie

இதுவரை லோகேஷ் கனகராஜின் படத்தில் தனியாக குத்து பாடல் என ஒன்று இருந்ததே இல்லை. முதல் முறையாக கூலி படத்தில் தான் குத்து பாடலை வைத்துள்ளார். ஜெயிலர் படத்தில் எப்படி காவாலா பாடலுக்கு தமன்னா நடனமாடி ஹிட் ஆனதோ, அதே போல் இப்படத்தில் கூலி படத்தில் பூஜாவின் நடனமும் ஹிட்டாகும் என ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகிறது.