நடிகை பூஜா ஹெக்டேவின் காலுக்கு என்னாச்சு! ஒரு மாசமாக வீல் ஸ்டிக்கில் நடக்கும் வைரல் வீடியோ

Beast Pooja Hegde Indian Actress
By Edward Nov 25, 2022 08:24 AM GMT
Report

தமிழில் நடிகர் ஜீவா நடிப்பில் 2012ல் வெளியான் படம் முகமூடி. இப்படத்தில் ஜீவாவுக்கு ஜோடியாக நடித்து தமிழில் அறிமுகமாகியவர் நடிகை பூஜா ஹெக்டே. இப்படம் சரியாக போகாததால் பூஜா ஹெக்டே தெலுங்கு பக்கம் சென்று நடித்து வந்தார்.

பல முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக நடித்து வந்த பூஜா ஹெக்டே அல்லு அர்ஜுன் நடிப்பில் ஆல வைகுண்டபுரமுலு படத்தில் ஜோடியாக நடித்து நல்ல வரவேற்பு பெற்றார். இதனைதொடர்ந்து தமிழில் பல ஆண்டுகள் கழித்து விஜய்யின் பீஸ்ட் படத்தில் நடித்து ரீஎண்ட்ரி கொடுத்தார்.

அவரின் கிளாமரான ஆட்டத்தால் ரசிகர்களை தன் பக்கம் இழுத்து வந்த பூஜா, இணையத்தில் ஆக்டிவாக இருந்து பிகினி, கிளாமர் புகைப்படங்களை பதிவிட்டு வந்தார். இந்நிலையில் கடந்த மாதம் கால் மூட்டில் ஏற்கட்ட தசைநார் பிரச்சனை ஏற்பட்டு நடக்கமுடியாமல் அவதிப்பட்டு வந்தார்.

இதனை இணையத்தில் பகிந்தும் இருக்கிறார். இந்நிலையில் தற்போது இரண்டாம் முறையாக நடக்க கற்றுக்கொள்கிறேன் என்று 40 நாட்களுக்கு மேல் வீல் ஸ்டிக்கில் நடக்கும் வீடியோவை பகிர்ந்துள்ளார் பூஜா ஹெக்டே. இதற்கு பலர் சீக்கிரம் நலமாக வாழ்த்து கூறி வருகிறார்கள்.