ராக்கி பாய்க்கு ரூட்டை போட்ட பூஜா ஹெக்டே.. உங்க காட்டுல மழை தான்

Yash Pooja Hegde
By Karthick Raja Jun 17, 2022 02:10 PM GMT
Report

இந்தியளவில் மிகவும் பிரபலமான முன்னணி நடிகைகளில் ஒருவர் பூஜா ஹெக்டே. இவர் சமீபத்தில் விஜய் நடிப்பில் வெளிவந்த பீஸ்ட் படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார். இப்படம் எதிர்பார்த்த அளவிற்கு ஓடவில்லை.

இதுமட்டுமின்றி சமீபகாலமாக பூஜா ஹெக்டே கதாநாயகியாக நடித்து வரும் பல திரைப்படங்கள் தோல்வியை மட்டுமே தழுவி வருகிறது. ஆனாலும், தொடர்ந்து பல முன்னணி நட்சத்திரங்களுடன் இணைந்து பல படங்களில் பிசியாக நடித்து வருகிறார்.

அந்த வகையில் தற்போது கே.ஜி.எப் படத்தின் மூலம் மாஸ் ஹீரோவாக மாறியுள்ள நடிகர் யாஷுடன் இணைந்து ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்கப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது.