இயக்குனர் பாலா விவாகரத்துக்கு சிங்கள நடிகை தான் காரணமா? சுதாரித்து கொண்ட மனைவி..

director bala divorce naankadavul muthumalar pooja umashankar
By Edward Mar 11, 2022 09:55 PM GMT
Report

முன்னணி இயக்குனராகவும் நடிகர் நடிகைகளை தன் படத்தில் எப்படி நடிக்க வைத்தால் விருது வாங்குவார்கள் என்ற கோணத்தில் படத்தினை இயக்கும் வல்லமை பெற்றவர் இயக்குனர் பாலா. பாலு மகேந்திரா வளர்த்து ஆளாக்கிய இயக்குனராக பல முன்னணி நடிகர்களை வைத்து கடின உழைப்பை கொடுத்த பாலா 17 வருட திருமண வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

17 வருடமாக ஒன்றாக வாழ்ந்த முத்துமலர் மீது கடந்த 4 ஆண்டுகளுக்கு முன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு பிரிவை ஏற்படுத்தியது. இதனால் விவாகரத்துக்கு முடிவெடுத்து மார்ச் 5ஆம்தேதி சட்டப்பூர்வமாக பிரிந்தனர். விவாகரத்துக்கு இருவர் தரப்பில் இருந்தும் சர்ச்சையான காரணங்கள் கூறப்பட்டு வருகிறது.

அதிலும் முத்துமலர் அரசியல் பிரமுகரின் மகனுடன் தொடர்பில் இருந்ததாகவும் பாலா தான் இயக்கிய ஒரு படத்தின் கதாநாயகியாக நடித்து சிங்கள நடிகையுடன் பல ஆண்டுகளாக கிசுகிசுக்கப்பட்டதாலும் தான் இருவரின் விவாகரத்துக்கு காரணம் என கூறப்படுகிறது.

நான் கடவுள் படத்தின் போது தனக்கு பிடித்த நடிகையாக பூஜா தான் என்று பேட்டியில் கூட தெரிவித்திருந்தார். அதில் ஆரம்பித்து பூஜாவிற்கு வாய்ப்பு வாங்கித்தருவது வரை பாலா உதவியிருக்கிறார்.

ஒரு விழாவில் மேடையில் பாலாவை பார்த்த அந்த நடிகையை பொது இடம் என்று கூட பார்க்காமல் ஓடி வந்து பாலாவின் கன்னத்தில் பச்சக் என்று ஒரு முத்தத்தை கொடுத்தது மிகவும் சர்ச்சையானது.

Gallery