44 வயசாகிடுச்சி! இனிமே சித்தியா தான் நடிக்கணும்! புலம்பும் நடிகை பூஜா

Pooja Indian Actress
By Edward Jul 05, 2022 04:00 AM GMT
Report

நடிகர் மாதவன் நடித்து வெளியான ஜே.ஜே படத்தின் இரண்டாம் கதாநாயகியாக நடித்து பிரபலமானவர் நடிகை பூஜா. அப்பா கர்நாடகத்தை சேர்ந்தவர். அவரது அம்மா இலங்கையை சேர்ந்தவர்.

பெங்களூரில் படிப்பை முடித்து நடிக்க ஆரம்பித்த பூஜா சில போல்ட்டான கதாபாத்திரத்தில் நடித்து மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றார். பாலா இயக்கத்தில் நான் கடவுள் ரோல் மிகவும் கடினமான நடித்திருக்கும் பூஜா போகபோக வாய்ப்புகள் குறைய ஆரம்பித்து மார்க்கெட்டை இழந்தார்.

இதன்பின் 2019ல் இலங்கையை சேர்ந்த தொழிலதிபரை திருமணம் செய்து கொண்ட பூஜா அங்கேயே செட்டிலாகிவிட்டார். தற்போது இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் பூஜா சமீபத்தில் ரசிகர்களுடன் டிவிட்டர் பக்கத்தில் பேசியுள்ளார்.

அதில் ஒரு நபர் அக்கா கம்பேக் கொடுங்க என்று கேட்க. அதற்கு பூஜா ஐய்யோ, ரொம்ப வயசாகிடுச்சி டா, 44 வயசு ஆயிடுச்சி. கம்பேக்ன்னா சித்தி ரோல் தான் பண்ணனும் என்று பதிலளித்துள்ளார்.