ஆடையில்லாத புகைப்படம் லீக்கானதற்கு பூனம் பஜ்வா கொடுத்த பதில்!..என்ன சொன்னார் தெரியுமா?
நடிகர் பரத் நடிப்பில் 2008 -ம் ஆண்டு வெளியான சேவல் என்ற படத்தின் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் தான் நடிகை பூனம் பஜ்வா.
இப்படத்தை தொடர்ந்து கச்சேரி ஆரம்பம், துரோகி, தம்பிக்கோட்டை ஆகிய படங்களில் நடித்துள்ளார். பூனம் பஜ்வா தமிழ் தாண்டி மலையாளம் மற்றும் கன்னட படங்களிலும் நடித்திருக்கிறார்.
சமீபத்தில் பேட்டி ஒன்றில் கலந்துகொண்ட பூனம் பஜ்வாவிடம், "உங்களுடைய புகைப்படத்தை மோசமான முறையில் சித்தரிக்கப்பட்டு சோசியல் மீடியாவில் வெளியானது. இது பற்றிய உங்களுடைய கருத்து என்ன என்று தொகுப்பாளர் கேட்டார்.
இதற்கு பதில் அளித்த அவர், நான் அந்த மாதிரியான புகைப்படத்தை பார்த்து அதிர்ச்சி அடைந்தேன். முதல் உண்மையான புகைப்படமா இல்லை எடிட் செய்யப்பட்டதா என்று பார்த்துக்கொண்டு இருந்தேன். இதனால் இரண்டு நாள் சரியாக சாப்பிடவில்லை, தூங்கவில்லை.
இதையடுத்து அந்த புகைப்படத்தை உடனே நீக்குமாறு சமூக வலைதளத்தில் புகார் செய்தேன். அதன் பிறகு அதை நீக்கி விட்டார்கள். இருப்பினும் தற்போதும் அந்த மாதிரியான புகைப்படங்கள் வந்துகொண்டு தான் இருக்கிறது என்று பூனம் பஜ்வா கூறியுள்ளார்.