நீச்சல் குள புகைப்படத்தால் ரசிகர்களை வியக்க வைக்கும் நடிகை பூனம் பாஜ்வா..
சினிமாவில் நடிப்பை தாண்டி தற்போது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கிளாமர் பதிவுகளையும் இணைய ஆப் மூலம் எக்ஸ்குளூசிவ் புகைப்படம், வீடியோக்களை பகிர்ந்தும் ரசிகர்களை வியக்க வைக்கும் நடிகை பூனம் பாஜ்வா, நீச்சல் குள புகைப்படங்களை தற்போது பகிர்ந்துள்ளார்.

பூனம் பாஜ்வா
தெலுங்கு சினிமாவில் அறிமுகமாகி பிரபலமானவர் தான் நடிகை பூனம் பாஜ்வா. தெலுங்கு, கன்னட மொழிகளில் நடித்த பூனம், தமிழில் சேவல், தெனாவட்டு, கச்சேரி ஆரம்பம், துரோகி, தம்பிகோட்டை போன்ற படங்களில் நடித்தார்.
அதன்பின் ஆள் அடையாளம் தெரியாமல் மாறிய பூனம், ஆம்பள படத்தில் குணச்சித்திர ரோலில் நடித்தார். அதன்பின் ரோமியோ ஜூலியட், அரண்மனை 2, முத்தின கத்திரிக்காய், குப்பத்து ராஜா, குருமூர்த்தி உள்ளிட்ட படங்களில் நடித்தார்.
இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் பூனம் பாஜ்வா, இணைய ஆப் மூலம் சம்பாதித்து வருகிறார். சமீபத்தில், நீச்சல் குளத்தில் இருந்தபடி எடுத்த புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.