பெண்களை விற்கும் புரோக்கர் வேலை செய்யும் இயக்குனர்! உண்மையை உடைத்த பிரபல நடிகை..

tollywood pawankalyan ramgopalvarma poonamkaur
By Edward Feb 26, 2022 04:00 PM GMT
Report

தமிழ் சினிமாவில் நெஞ்சிருக்கும் வரை படத்தின் மூலம் அறிமுகமாகி நல்ல வரவேற்பை பெற்றவர் பூனம் கவுர். அதன் பின் நடிகர் விஷால் நடித்த வெடி படத்தில் அவருக்கு தங்கையாக நடித்தார். பின் பயணம், உன்னைப்போல் ஒருவன் உள்ளிட்ட சில படங்களில் நடித்தார்.

பின் தெலுங்கு படங்களில் நடிக்க சென்றுவிட்டார். இந்நிலையில் இயக்குனர் ராம் கோபால் நடிகர் பவன் கல்யாண் சமீபத்தில் பேசிய பேச்சினை பாராட்டி டிவிட்டரில் பதிவு ஒன்றினை போட்டுள்ளார்.

அதற்கு நடிகை பூனம் கவூர், ஒரு இயக்குனர் நடிகைகளின் தனிப்பட்ட வாழ்க்கையில் முற்றிலும் துஷ்பிரயோகம் செய்கின்றவர் என்று கூறியுள்ளார். மேலும் மற்றொரு இயக்குனர் அரசியல் ரீதியாக இழுவுபடுத்துவது அவரின் கைவந்த கலையாக இருக்கிறது.

இருவரும் பெண்களை தவறாக பயன்படுத்தும் புரோக்கர்களாக இருக்கும் ஆயுதங்கள் என்று குறிப்பிட்டுள்ளார். ஒருவர் ராம் கோபால் வர்மா என்றாலும் அந்த மற்றொரு அரசியல் சார்ந்த இயக்குனர் யார் என்று கேள்வி கேட்டு வருகிறார்கள்.

இப்படி நடிகை பூனம் கவுர் டிவிட்டரில் பதிவிட்டுள்ளது, டோலிவுட் வட்டாரத்தில் சர்ச்சையை கிளப்பியுள்ளது.