நான் செஞ்ச தப்பு.. வெளியில் சொன்னா..!! நடிகை பூர்ணிமா பாக்யராஜ் ஓப்பன் டாக்...
நடிகை பூர்ணிமா
80, 90களில் முன்னணி நடிகையாக இருந்து டாப் நடிகர்களுடன் ஜோடிப்போட்டு நடித்து பிரபலமானவர் நடிகை பூர்ணிமா. பல படங்களில் நடித்து வந்த பூர்ணிமா, இயக்குனர் பாக்யராஜை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
சாந்தனு, சரண்யா என்ற இரு குழந்தைகளை பெற்று சினிமாவில் இருந்து விலகி இருந்தார். தற்போது சீரியல்களிலும் படங்களில் குணச்சித்திர ரோலிலும் நடித்து வருகிறார்.
வெளியில் சொன்னா
சமீபத்தில் அளித்த பேட்டியொன்றில், எனக்கு சமைக்கவே தெரியாது, நான் திருமணத்திற்கு பின் என் பிசினஸில் கவனம் செலுத்த ஆரம்பித்துவிட்டேன். அதே நேரத்தில் நடிக்கவும் செய்து கொண்டிருந்ததால் என்னால் சமையலில் கவனம் செலுத்தாமல் போனது. அதேபோல் என் உடல் நிலையை சரியாக கவனிக்காமல் சில ஆண்டுகளுக்கு முன் உடல் எடை கூடிவிட்டது.
நான் சாப்பாட்டு விஷயத்தில் எது கிடைத்தாலும் சாப்பிட்டுவிடுவேன், இதுதான் வேண்டும் என்று இருக்கமாட்டேன். சில ஆண்டுகளுக்கு முன் சாப்பாட்டில் கவனம் வைக்காததால் என் உடல் எடை கூடியதால் நான் அதிர்ச்சியடைந்தேன். அதனால் தான் எல்லோரும் வேலை இருக்கிறது என்று ஓடிக்கொண்டிருந்தாலும் நம் உடம்பை கவனித்துக் கொள்ள வேண்டும் என்று நான் கூறுகிறேன்.
எனக்கு சமைக்க தெரியாது, எனக்கு வீட்டு வேலை தெரியாது என்று வெளியில் சொன்னால் யாரும் நம்பமாட்டார்கள். காரணம் கலை நயத்தில் இருப்பவர்கள் வீட்டையும் அழகாக பார்த்துக்கொள்வார்கள். ஆனால் என்னால் சமையல் செய்யமுடியாது. சமையல் தெரியாது என்று பெருமையாக பேசவில்லை, வருத்தத்தில் தான் சொல்கிறேன் என்று பூர்ணிமா தெரிவித்துள்ளார்.