பிச்சைக்காரனை விட கம்மியாக சம்பாதிக்கும் விஜய் டிவி நடிகர்.. அய்யய்யோ போச்சா

vijay tv salary ravindaran
By Karthick Raja Feb 05, 2022 12:20 PM GMT
Report

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் தொடர் காற்றுக்கென்ன வேலி. இந்த தொடரில் மாறன் என்கிற கதாபாத்திரத்தில் நடித்து வருவபவர் நடிகர் ராகவேந்திரன் இவர் அந்த தொடரில் இருந்து இரண்டு மாதத்தில் வெளியேறிவிடுவேன் என தெரிவித்து உள்ளார். சீரியல் ட்ராக் மாறுவதால் தன் கதாபாத்திரம் தொடர்ந்து இருக்காது என தெரிவதாக அவர் கூறி உள்ளார்.

15 வருடமாக இருந்த மீடியா துறையில் இருந்து வெளியேறுவது வருத்தமாக இருக்கிறது என கூறியுள்ள அவர், இந்த முடிவை அதிகம் யோசித்து தான் எடுத்திருப்பதாக கூறியுள்ளார். காற்றுக்கென்ன வேலி தொடரில் நடிப்பதற்காக சம்பளம் மிக மிக குறைவு என தெரிவித்து உள்ள அவர், 2 மாதங்களுக்கு முன் மாதம் 6000 ருபாய் மட்டுமே சம்பளமாக பெற்றேன்.

அதன் பின் 3500 ரூபாய் ஒரு நாளுக்கு கொடுத்தார்கள். பிச்சைக்காரனே என்னை விட அதிகம் சம்பாதிப்பான். காற்றுக்கென்ன வேலியில் என் கதாபாத்திரம் போகும் விதத்தை பொறுத்து நான் தொடர்வதா இல்லையா என்பது தெரியும்.