ட்ராக்கர்களை கைக்குள் போட்டு முன்னணி நடிகர்களின் வசூலை குறைக்கும் ஹீரோ

movie box office kollywood gossip
By Kathick Nov 22, 2021 10:30 AM GMT
Report

தமிழ் சினிமா என்றாலே போட்டி பொறாமை நிறைந்தது தான். அதிலும் உச்ச நடிகர்கள் என்றால் சொல்லவா வேண்டும். ஒரு படம் ஹிட் ஆனால், பார்ட்டி வைப்பது சகஜம், ஆனால், தோல்வியடைந்தால் மற்றொரு குரூப் பார்ட்டி வைத்து கொண்டாடிய கதையெல்லாம் இங்கு இருக்கு.

அந்த வகையில் தமிழ் சினிமாவில் 70 வயது தாண்டியும் நம்பர் 1 இடத்தில் இருக்கும் நடிகரை கண்டு, இசை வெளியீட்டு விழாவில் வீரவசனம் பேசும் நடிகருக்கு கொஞ்சம் பொறாமை தானாம். அதன் காரணமாகவே சில வருடங்களுக்கு முன்பு தமிழ் சினிமாவில் வசூல் வடைகளை அள்ளிவிடும் ட்ராக்கர்கள் என்ற ஒரு சிலரை அழைத்து தனது டீமை வலுப்படுத்தியுள்ளார்.

அவர் படம் ஓடுகிறதோ இல்லையோ 200 கோடி, 300 கோடி என்று அடுத்து நாள் காலை டேட்டாவுடன் வந்துவிடுவார்கள். சரி அவரை புகழ்ந்து பேசுவது தவறில்லை, அவர்கள் டாஸ்க் மற்ற நடிகர்களின் வசூலை குறைத்து சொல்வது தான் போல.

ஆமாம், அதிலும் குறிப்பாக உச்ச நடிகரின் படத்திற்கு பலமாக நெகட்டிவ் விமர்சனங்களை பரப்பிவிட்டு, தினமும் வசூலை குறைத்து சொல்வதற்கு ஒரு பெரிய கும்பலே வேலை செய்வதாக செய்திகள் கசிகின்றது. போட்டியில் இல்லாத உச்ச நடிகருக்கே இந்த நிலை என்றால், அவருடைய போட்டியாளர் படம் பொங்கலுக்கு வர இந்த ட்ராக்கர்கள் என்னென்ன கணக்கு வழக்குகளை அள்ளிவிடுவார்கள் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.