அந்த தொழிலில் கோடிக்கணக்கில் சம்பாதிக்கும் டாப் 5 நடிகைகள்!!
இந்திய சினிமாவில் டாப் இடத்தில் நடிகைகள் படத்தில் நடிப்பதை தாண்டி தங்களுக்கென தனியான தொழிலையும் ஆரம்பித்து சம்பாதித்து வருகிறார்கள்.
அதிலும் பிரபல நடிகைகள் தோல் பராமரிப்பு, ஒப்பனை பொருட்கள், முடி பராமரிப்பு என்று அழகு சாதனம் சம்பந்தமான பொருட்களை உற்பத்தி செய்யும் நிறுவனத்தில் முதலீடு போட்டு சம்பாதித்து வருகிறார்கள்.
அந்த வரிசையில் இருக்கும் டாப் நடிகைகள் யார் என்று பார்ப்போம்..
நயன்தாரா
தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் தான் நடிகை நயன்தாரா. இவர் ரெனிடா ராஜன் என்பவர் உடன் சேர்ந்து லிப்பாம் நிறுவனம் ஒன்றை துவங்கி நடித்தி வருகிறார்.
காஜல் அகர்வால்
தென்னிந்திய சினிமாவின் பிரபல நடிகைகளில் ஒருவர் காஜல் அகர்வால். இவர் TAC பியூட்டி ஃபுல் ஐ காஜல்‘ என்ற அந்த நிறுவனம் ஒன்றை வைத்துள்ளார்.
தீபிகா படுகோன்
பாலிவுட் திரையுலகின் டாப் நடிகை தான் தீபிகா படுகோன். இவர் 82E என்ற பெயரில் தோல் பராமரிப்பு பிராண்ட் நிறுவனம் ஒன்றை துவங்கி இருப்பது குறிப்பிடத்தக்கது.
கத்ரீனா கைஃப்
பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகைகளுள் ஒருவராக இருந்துவரும் நடிகை கத்ரீனா கைஃப் மேக்கப் பிராண்ட் தொடக்கி நடத்தி வருகிறார்.
பிரியங்கா சோப்ரா
தமிழ் சினிமாவில் அறிமுகமாகி தற்போது ஹாலிவுட் சினிமாவில் நடித்து வருபவர் தான் பிரியங்கா சோப்ரா. அனோமலி எனும் ஹேர்கேர் பிராண்ட் நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார்.