மாதம்பட்டி ரங்கராஜுக்கு 2- வது காதலா? அப்போ மனைவியின் நிலை.. வைரல் பதிவு
மாதம்பட்டி ரங்கராஜ்
புகழ்பெற்ற சமையல் கலைஞராக திகழ்ந்து வருபவர் மாதம்பட்டி ரங்கராஜ். இவர் பல சினிமா நட்சத்திரங்களின் வீட்டு நிகழ்ச்சிகள் மற்றும் முக்கிய நிகழ்வுகளுக்கு கேட்டரிங் சர்வீஸ் செய்யும் நிறுவனத்தை நடத்தி வருகிறார்.
இதை தவிர மாதம்பட்டி அமெரிக்காவில் சொந்தமாக ஹோட்டல் ஒன்றை இயக்கி வருகிறார். அங்கு தமிழ்நாட்டின் பாரம்பரிய உணவுகள் பரிமாறப்படுகின்றன.
சமையல் கலைஞராக சிறந்து இருக்கும் இவர் சினிமா மீதும் ஆர்வம் கொண்டவராக வலம் வருகிறார். அந்த வகையில், மாதம்பட்டி இதற்கு முன் மெஹந்தி சர்க்கஸ் என்ற படத்தில் ஹீரோவாக நடித்து இருந்தார்.
அதுமட்டுமின்றி, விஜய் டிவியில் மிகவும் பிரபலமான குக் வித் கோமாளி ஷோவில் நடுவராக இருந்து மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றார். மாதம்பட்டி ரங்கராஜுக்கு ஸ்ருதி என்ற மனைவியும் இரண்டு மகன்களும் இருக்கின்றனர்.
2- வது காதலா?
இந்நிலையில் தற்போது பிரபல ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிஸில்டா என்பவர் மாதம்பட்டி ரங்கராஜ் உடன் காதலர் தினத்தை கொண்டாடியதாக இன்ஸ்டாவில் பதிவிட்டு இருக்கிறார்.
ஜாய் ஏற்க்கனவே திருமணம் ஆகி விவாகரத்து ஆனவர். இவர்கள் ஒன்றாக இருக்கும் சில ஸ்டில்களும் இணையத்தில் வைரல் ஆகி இருக்கிறது.
ஜாய் கிரிஸில்டா போன் வால்பேப்பர் கூட அவர்கள் ஜோடியாக இருக்கும் போட்டோ தான் இருக்கிறது என நெட்டிசன்கள் ஆதாரத்துடன் ட்விட்டரில் பதிவிட்டு வருகின்றனர். அவரை தான் மாதம்பட்டி விரைவில் இரண்டாம் திருமணம் செய்ய போகிறாரா என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
So madhampatty divorced her wife & married joy. Ada pongada! But her wife sruthi still having their photos in instagram 💔
— Xman_Master_SRI (@Masterr_SRI) February 20, 2025
Pic 1 & 2 & 3 JoyRangaraj
What is the tag of photo 4 his wife..??? #MadhampattyRangaraj #Rangaraj pic.twitter.com/diueqltaui