திருமணம் நடிப்புக்கு தடையில்லை!! நிரூபித்து காட்டிய பிரபல நடிகைகள்..
திருமணம் நடிப்புக்கு தடையில்லை
சினிமாவில் ஒருசில நடிகைகள் திருமணத்திற்கு பின் குடும்பத்திற்காக நடிப்பை நிறுத்திவிடுவார்கள். ஆனால் ஒருசிலர் மட்டும் தான் திருமணத்திற்கு பின்பும் நடிப்பார்கள்.
அப்படி திருமணத்திற்கு பின் நடிகைகளின் சினிமா வாழ்க்கை எபடி இருக்கும் என்பது எப்போதும் விவாதப்பொருளாக இருக்கும். ஆனால் நயன் தாரா, கீர்த்தி சுரேஷ், ரகுல் ப்ரீத் சிங், காஜல் அகர்வால் உள்ளிட்ட நடிகைகள் நடிப்புக்கு திருமணம் தடையாக இல்லை என்று நிரூபித்துள்ளனர்.
திருமணத்திற்கு பின்பும் அவர்களின் கரியரை மேலும் உயர்த்திக்கொண்டு தான் செல்கிறார்கள். திருமணத்திற்கு பின் நயன் தாரா கோடிக்கணக்கில் அதுவும் 12 கோடி ரூபாய் வரை சம்பளமாக பெறுகிறார். கீர்த்தி சுரேஷுக்கு திருமணத்திற்கு பாலிவுட் நடிக்க வாய்ப்புகள் அதிகரித்து வருகிறது.
திருமணம் நடிகைகளின் முன்னேற்றத்திற்கோ, வளர்ச்சிக்கோ தடை போடாது என்று ரகுல் ப்ரீத் சிங் சமீபத்தில் கூறியிருக்கிறார். இவர்கள் மட்டுமில்லாமல் பல நடிகைகள் திருமணத்திற்கு பின்பும் நடித்து வருகிறார்கள்.
பல நடிகைகள் திருமணத்திற்கு பின் தங்கள் திரை வாழ்க்கையை தொடர்வதன் மூலம் நடிப்புக்கு திருமணம் தடையாக இருக்காது என்று நிரூபித்து முன்னேறி வருகிறார்கள்.