மருத்துவமனையால் 60 கோடி நஷ்டம்.. பவர் ஸ்டார் ஸ்ரீனிவாசனை நம்பி ஏமாந்து போன நிலைமை..
தமிழ் சினிமாவில் நீதான் அவன் என்ற படத்தின் மூலம் நடிகர் அவதாரம் எடுத்தவர் ஸ்ரீனிவாசன். லத்திகா, கண்ணா லட்டு திண்ண ஆசையா, ஐ, மாங்கா, நாரதன், வாலிப ராஜா, க க க போ, கவன் உள்ளிட்ட பல படங்களில் காமெடி நடிகராகவும் ஒருசில படங்களில் சிறப்பு தோற்றத்திலும் நடித்து வந்தார்.
இதன்மூலம் பவர் ஸ்டார் ஸ்ரீனிவாசன் என்று கூட தமிழக ரசிகர்களை வரவேற்பு பெற்று வந்தார். நடிப்பை தாண்டி, தயாரிப்பாளர், மருத்துவர், தொழிலதிபர் என்று பன்முகத்திறமை கொண்டு விளங்கிய பவர் ஸ்டார், சமீபத்தில் உடல்நலக்குறைவு காரணமாக சிகிச்சை பெற்று வந்து பின் அதிலிருந்து நலம் பெற்றுள்ளார்.

பவர் ஸ்டார்
சமீபத்தில் நடிகை ஷகிலா நடத்தி வரும் யூடியூப் பேட்டியில் கலந்து கொண்டு பல அனுபவங்களையும் தான் பட்ட கஷ்டங்களையும் பகிர்ந்துள்ளார். சினிமா வரத்திற்கு முன் 4 , 5 தொழில் செய்து வந்தேன். அப்போது என் பேர் வெளியே வரவில்லை என்று ஸ்ரீஅடி பாபாவிடம் சென்று மருத்துவராக இருப்பதை தாண்டி என்ன செய்வது என்று கேட்டேன்.
அதன்பின் சினிமாவிற்கு வரவேண்டும் என்று ஒருவர் கேட்டு கூப்பிட்டார். அப்போது தான் ஃபைனான்ஸ் செய்யவும் நடிக்கவும் ஆரம்பித்து லத்திகா படத்தினை எடுத்தேன். அதன் ஆடியோ லான்சில் தான் திருமாவளவன் எனக்கு பவர் ஸ்டார் என்று பெயர் வைத்தார். ஆனால், அப்படம் நஷ்டம் அடைந்தேன்.

60 கோடி
அதன்பின் பெரியளவில் லத்திகா என்ற பெயரில் மருத்துவமனையில் வைத்திருந்தேன். லத்திகா என்பது என் மகள் பெயரில் ஆப்டிகல்ஸ், 4 ஆபிஸ் என வைத்திருந்தேன். ஆனால் அதிலும் சிலரை நம்பி 60 கோடி ரூபாய் ஏமாந்து கஷ்டப்பட்டேன். அதன்பின் செய்த சினிமா வாய்ப்பால கொஞ்ச கடனை தீர்த்திவிட்டேன் என்று பவர் ஸ்டார் கூறியுள்ளார்.