26 வயதில் காதல் தோல்வியால் தற்கொலை செய்த இளம் நடிகை !! காரணத்தை புட்டுபுட்டி வைத்த பயில்வான் ரங்கநாதன்..

Gossip Today Bayilvan Ranganathan Tamil Actress Actress
By Edward Jul 30, 2023 04:49 AM GMT
Report

இயக்குனர் மகிவர்மன் இயக்கத்தில் பிரபல கட்சியின் மூத்த தலைவர் சி மகேந்திரனின் மகன் புகழ் மகேந்திரனை வைத்த வாய்தா என்ற படத்தினை இயக்கி இருந்தார். இப்படத்தில் இளம் நடிகையான தீபா என்கிற பவுலின் ஜெஸ்ஸிகா கதாநாயகியாக நடித்திருந்தார். விஷால் நடிப்பில் வெளியான துப்பறிவாளன் படத்தில் சிறு ரோலில் நடித்திருந்தார் தீபா.

கடந்த ஆண்டு விருகம்பாக்கத்தில் இருக்கும் அவரது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார் தீபா. இதற்கு காரணம் காதல் தோல்வி தான் என்று கூறப்பட்டு வந்த நிலையில் பயில்வான் ரங்கநாதன் முக்கிய காரணம் என்ன என்று கூறியுள்ளார்.

தன்னுடன் சேர்ந்து நடித்த சிராஜுதின் என்பவருடன் தீபா லிவ்விங் வாழ்க்கையில் வாழ்ந்து வந்துள்ளார். நடிகையின் தற்கொலைக்கு யாரும் காரணமில்லை என்று கூறப்பட்டு வந்த நிலையில், சிராஜுதினுக்கு ஏற்கனவே திருமணமாகி குழந்தைகள் இருப்பது தெரிந்து தீபா அவருடன் காதலில் இருந்துள்ளார்.

தீபாவுக்கு சினிமா வாய்ப்பு வாங்கி கொடுத்த நண்பர் பிரபாகரன் பற்றியும் எந்தவொரு தடையமும் தெரியவில்லை என்றும் தெரிவித்துள்ளார் பயில்வான். ஆந்திராவில் இருக்கும் தீபாவின் பெற்றோர்கள் கூட தன் மகள் தற்கொலை குறித்து சிராஜுதின் மீதோ பிரபாகரன் மீதோ எந்தவொரு புகாரும் அளிக்காமல் இருந்துள்ளனர்.

இப்படி சினிமா வாய்ப்புக்காக சொந்த ஊரைவிட்டு இங்கு வந்து இளம் நடிகைகள் காதலில் விழுந்து சீரழிந்து போகிறார்கள் என்றும் பயில்வான் ரங்கநாதன் ஒரு வீடியோவில் பகிர்ந்துள்ளார்.