வயதானவர் போல் மாறிய பாகுபலி பிரபாஸ்.. ஷாக்கான ரசிகர்கள்

Prabhas
By Kathick Aug 29, 2022 09:07 AM GMT
Report

தெலுங்கு திரையுலகில் மிகவும் பிரபலமான முன்னணி நடிகர் பிரபாஸ். இவர் பாகுபலி படத்தின் மூலம் இந்தியளவில் பிரபலமாகிவிட்டார். இப்படத்தின் இரண்டு பாகங்களும் இவருடைய சினிமா வளர்ச்சிக்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளது.

பாகுபலி படத்தை தொடர்ந்து அடுத்தடுத்து வெளிவந்த சாஹோ, ராதே ஷ்யாம் ஆகிய படங்கள் படுதோல்வியை தழுவியது. மேலும், தற்போது பிரபாஸ் கைவசம் சலார், ஆதிபுருஷ் ஆகிய படங்கள் உள்ளன. இந்நிலையில், அனைவருக்கும் அதிர்ச்சி கொடுக்கும் வகையில் பிரபாஸின் புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.

ஆம், பாகுபலி படத்தில் செம ஃபிட்டாக இளம் லுக்கில் இருந்த நடிகர் பிரபாஸ் தற்போது, முகம் முழுவதும் மாறி வயதானவர் போல் மாறியுள்ளார். இந்த புகைப்படத்தை பார்த்த பிரபாஸின் ரசிகர்கள் பலருக்கும் ஷாக்காகியுள்ளனர். இதோ அந்த புகைப்படம்..


Gallery