104 பில்லியன் அமெரிக்க டாலர் சொத்து!! முகேஷ் அம்பானியின் பறக்கும் அரண்மனை...
முகேஷ் அம்பானி
உலகின் 18வது பணக்காரரும் இந்தியாவின் நம்பர் ஒன் பணக்காரருமான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் குழுமத்தின் தலைவருமன முகேஷ் அம்பானி கடந்த சில ஆண்டுகளுக்கு முன் விலையுயர்ந்த 9 தனியார் ஜெட்களை வாங்கியிருந்தார் அம்பானி.
Boeing 737 Max 9
இந்நிலையில் கடந்த 2023 ஆம் ஆண்டு ரூ. 1000 கோடி ரூபாய்க்கு மேல் மதிப்புள்ள அதி-ஆடம்பர ஹெட் விமானத்தை வாங்கியிருக்கிறார். Boeing 737 Max 9 பெயரிடப்பட்ட இந்த விமானம், முகேஷ் அம்பானியின் தனிப்பட்ட தேவைகளுக்கு ஏற்றவாறு பிரத்தியேகமான முறையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
2023ல் வாங்கப்பட்டு விமானத்தை பரிசோதிக்கும் பணிகள் அனைத்து வசதிகளும் இருப்பது உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து கடந்த ஆண்டு 2024 ஆகஸ்ட் 28 ஆம் தேதி டெலிவரி செய்யப்பட்டுள்ளது.
ஆடம்பர வசதிகள்
இரண்டு என்ஜின்களை கொண்ட இந்த விமானத்தில் பல்வேறு ஆடம்பர வசதிகள் கொண்டதாம். மேக்ஸ் 8 விமானத்தில் இருக்கும் கேபின்களை விட இந்த Boeing 737 Max 9 விமானத்தில் இருக்கும் கேபின் மிகப்பெரியதாம்.
11,770 கிலோ மீட்டர் தூரம் வரை பறக்கும் திறன் கொண்ட Boeing 737 Max 9 விமானம் முதன்முறையாக இந்தியாவில் இருக்கும் ஒரு நபருக்கு டெலிவரி செய்துள்ளது. டெல்லி வரவழைக்கப்பட்டப்பின் இந்திய விமான போக்குவரத்து ஆணையத்திடம் பிடிஏவிகே என்ற பெயரில் பதிவு செய்யப்பட்டு பயன்பாட்டுக்கு வந்துள்ளது.


