அனுஷ்காவை கழட்டிவிட்ட 43 வயது நடிகர்!! 32 வயது நடிகையுடன் மாலத்தீவில் ரகசிய நிச்சயமா!!

Anushka Shetty Gossip Today Bollywood Prabhas Kriti Sanon
By Edward Feb 08, 2023 07:47 AM GMT
Edward

Edward

Report

பிரபாஸ்

தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்ந்து வருபவர் நடிகர் பிரபாஸ். அவர் நடிப்பில் பல பெரிய பட்ஜெட் படங்கள் வெளியாகி சூப்பர் ஹிட் கொடுத்தது. அதில் முக்கிய படமாக அமைந்து பல கோடி வசூலை அள்ளியது பாகுபலி.

இரு பாகங்களாக இயக்குனர் ராஜமெளலி இயக்கத்தில் உருவாகி இந்திய சினிமாவையே அதிரவைத்தது. அப்படத்தினை தொடர்ந்து பிரபாஸ் ராதே ஸ்யாம் படத்தில் நடித்து படுதோல்வியை சந்தித்தார்.

அனுஷ்காவை கழட்டிவிட்ட 43 வயது நடிகர்!! 32 வயது நடிகையுடன் மாலத்தீவில் ரகசிய நிச்சயமா!! | Prabhas Team Quashes Engagement Rumours Kritisanam

தற்போது அதிபுருஸ் மற்றும் சலார் போன்ற படங்களில் நடித்து வருகிறார். அதிபுரூஸ் படம் சமீபத்தில் மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகி அதன் டீசர் விமர்சனத்திற்குள்ளாகியது.

இந்நிலையில் அப்படத்தில் சீதையாக நடித்துள்ள நடிகை கிரித்தி சனோன், பிரபாஸ் இருவரும் ரகசியமாக காதலித்து வருவதாக காதல் வதந்திகள் பரவியது. ஏற்கனவே நடிகை அனுஷ்கா செட்டியுடன் காதலில் இருந்து பின் நண்பர்களாக மாறியது எல்லோருக்கும் தெரிந்த ஒன்று.

அனுஷ்காவை கழட்டிவிட்ட 43 வயது நடிகர்!! 32 வயது நடிகையுடன் மாலத்தீவில் ரகசிய நிச்சயமா!! | Prabhas Team Quashes Engagement Rumours Kritisanam

ரகசிய நிச்சயமா

இதனை தொடர்ந்து இருவரும் காதலில் இல்லை என்று வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்தனர். ஆனால் அந்த விவகாரம் தற்போது மீண்டும் எழுந்து, 32 வயதான நடிகை கிரித்தி சனோன்-ஐ 43 வயதான நடிகர் பிரபாஸ் மாலத்தீவில் வரும் 14 ஆம் தேதி காதலர் தினத்தில் நிச்சயம் செய்யவுள்ளார்கள் என்ற தகவல் வெளியாகியது.

இதுகுறித்து பிரபாஸ்-ன் அசோசியேட் ஒருவர், பிரபாஸ் - கிரித்தி சனோன் வெறும் நண்பர்கள் தான். அவர்களுக்கு நிச்சயம் என்ற செய்தி வெளியாவதில் உண்மையில்லை என்று கூறி வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

அனுஷ்காவை கழட்டிவிட்ட 43 வயது நடிகர்!! 32 வயது நடிகையுடன் மாலத்தீவில் ரகசிய நிச்சயமா!! | Prabhas Team Quashes Engagement Rumours Kritisanam