கமலை நம்பி அயன் மேனாக மாறிய பிரபாஸ்!! 600 கோடிக்கு ஆப்பு என கலாய்க்கும் நெட்டிசன்கள்..

Kamal Haasan Gossip Today Deepika Padukone Prabhas Amitabh Bachchan
By Edward Jul 20, 2023 05:32 AM GMT
Report

தெலுங்கு சினிமாவில் டாப் நடிகராக திகழ்ந்து வரும் நடிகர் பிரபாஸ், ரசிகர்களால் பான் இந்தியன் ஸ்டார் என்று புகழப்பட்டும் வருகிறார்.

பாகுபலி படத்தினை தொடர்ந்து அவர் நடிப்பில் பல கோடி செலவில் எடுத்த ராதே ஷ்யாம், ஆதிபுருஸ் போன்ற படங்கள் படுதோல்வியை கொடுத்ததோடு வசூலில் பல கோடி நஷ்டத்தையும் கொடுத்திருக்கிறது.

தற்போது சலார் படத்தில் கமிட்டாகி நடித்து வந்த நிலையில் பிரபாஸின் அடுத்த படமான Project-K-வை இயக்குனர் நாக் அஸ்வின் இயக்கவுள்ளார். அபிதாப் பச்சன், கமல் ஹாசன், தீபிகா படுகோன், திஷா பதானி உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடிக்கவுள்ளனர்.

150 கோடி பட்ஜெட்டில் உருவாகும் இப்படத்தில் கமல் ஹாசன் வில்லனாக நடிக்கவுள்ளார் என்றும் கூறப்படுகிறது.

இந்நிலையில் Project-K படத்தின் பிரபாஸ் லுக் போஸ்டராக படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். அயன் மேன் ஷூட் கெட்டப்பில் பிரபாஸ் போஸ்டரை பார்த்து நெட்டிசன்கள் கலாய்த்து வருகிறார்கள்.


Gallery