இரண்டாம் திருமணம் செய்து கொள்ள போகும் வாரிசு நடிகரின் மகள் ஐஸ்வர்யா!! அதுவும் விஷால் பட இயக்குனரா!!
மார்க் ஆண்டனி என்ற மிகப்பெரிய ப்ளாக் பஸ்டர் ஹிட் படத்தை கொடுத்து பிரபலமானவர் தான் ஆதிக் ரவிச்சந்திரன். இவர் இயக்குனர் மட்டுமின்றி சில படங்களில் நடித்தும் இருக்கிறார்.
மார்க் ஆண்டனி படத்தின் வெற்றி அடுத்து ஆதிக் ரவிச்சந்திரன் அஜித்துடன் கூட்டணி வைத்து இருப்பதாக சினிமா வட்டாரங்களில் பேசப்படுகிறது. இதற்கிடையில் ஆதிக் குறித்து தகவல் ஒன்று வெளியாகி இருக்கிறது.
அது என்னவென்றால் பிரபல நடிகர் பிரபுவின் மகள் ஐஸ்வர்யாவை, ஆதிக் ரவிச்சந்திரன் காதலித்து வருகிறாராம். தற்போது இரண்டு வீட்டாரின் சம்மதத்துடன் வரும், டிசம்பர் 15ம் தேதி திருமணம் நடைபெற இருப்பதாக சினிமா பத்திரிகையாளர் பிஸ்மி கூறியுள்ளார்.
ஆனால் பிரபு மகள் ஐஸ்வர்யா ஏற்கனவே திருமணம் செய்து விவாகரத்து ஆனவர் என்றும் ஆதிக் ரவிச்சந்திரனை இரண்டாம் திருமணம் செய்யவுள்ளார் என்ற செய்தியும் இணையத்தில் கசிந்து சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது.
மேலும், ஆதிக் ரவிச்சந்திரன் நடிகர் பிரபு மகளை திருமணம் செய்யவுள்ளாரா? அல்லது பிரபு பெயர் கொண்ட வேறொருவரின் மகளை திருமணம் செய்யவுள்ளாரா? என்ற தகவல் அதிகாரப்பூர்வமாக வெளியாகவில்லை.
இது தொடரப்பாக அதிகாரபூர்வ அறிவிப்பு பிரபு குடும்பத்தில் இருந்து விரைவில் வரும் என்று ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகிறது.