இரண்டாம் மனைவிக்கு பிறந்த குழந்தை!! முதன்முதலாக வெளியில் தலைக்காட்டிய பிரபுதேவா..
இந்திய சினிமாவில் சிறந்த நடன அமைப்பாளராகவும் இந்தியன் மைக்கேல் ஜாக்சனாகவும் திகழ்ந்து வருபவர் பிரபுதேவா. இயக்குனர், நடன இயக்குனர், நடிகர் என்று தற்போது இருந்து வரும் பிரபுதேவா இடையில் பல சர்ச்சையிலும் சிக்கினார்.
முதல் மனைவி இருக்கும் போதே நடிகை நயன் தாராவுடன் காதலில் இருந்து அதன்பின் பிரிந்தார்.
நயன் தாராவுடன் ஏற்பட்ட பிரிவிற்கு பிறகு சிங்கிளாக படங்களில் நடித்து வந்த பிரபுதேவா, சில ஆண்டுகளுக்கு முன் ஹிமானி சிங் என்பவரை ரகசியமாக திருமணம் செய்து கொண்டார்.
சமீபத்தில் தம்பதியினருக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. தன் குழந்தையை பார்த்துக்கொள்ள நேரம் ஒதுக்க முடிவெடுத்து சினிமாவில் இருந்து ஒதுங்கவுள்ளதாகவும் தெரிவித்திருந்தார்.
மனைவியையும் குழந்தையையும் வெளியில் காட்டாமல் இருந்த பிரபுதேவா, குடும்பத்துடன் திருப்பதிக்கு சென்று கடவுள் வழிபாடு செய்திருக்கிறார்.


