மனைவியை தவிக்கவிட்ட நடிகர் மஹத்! உன் பின்னாடி நான் சுத்தணுமா..
பிக் பாஸ் புகழ் நடிகர் மஹத் சிம்புவுக்கு மிகவும் நெருக்கமானவர் என்பது எல்லோருக்கும் தெரியும். அவர் பிக் பாஸ் வீட்டில் இருந்து வந்த பிறகு காதலி பிராச்சி மிஸ்ராவை திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு தற்போது ஒரு குழந்தையும் இருக்கிறது.
தற்போது மஹத் ஆஹா ஓடிடிக்காக எமோஜி என்ற வெப் சீரிஸில் நடித்து இருக்கிறார். அதற்கு நல்ல வரவேற்பும் கிடைத்து இருக்கிறது.

இந்நிலையில் மஹத்தின் மனைவி பிராச்சி மிஸ்ரா இன்ஸ்டாவில் ஒரு புகைப்படம் பகிர்ந்து இருக்கிறார். அதில் மஹத் ஓடுவது போலவும் பிராச்சி அவரை துரத்திக்கொண்டு ஓடுவது போலவும் இருக்கிறது.
"எனக்கு இந்த போட்டோ பிடிக்கும், ஆனால் ஒரு கேள்வி.. நான் ஏன் உன் பின்னால் ஓடிக்கொண்டிருக்கிறேன். அது தலைகீழாக தான் இருந்திருக்க வேண்டும். உன்னை மிஸ் செய்கிறேன் மஹத். சீக்கிரம் வந்து சேர்" என பிராச்சி தெரிவித்து இருக்கிறார்.