நான் என் மனைவி பூஜாவை விவாகரத்து செய்யவில்லை!! பிரதீப் ஆண்டனி ஓபன் டாக்..

Bigg Boss Divorce Pradeep Anthony
By Jai Nov 18, 2026 09:45 AM GMT
Report

பிக்பாஸ் சீசன் 7ல் போட்டியாளராக கலந்து கொண்டு பிரபலமான பிரதீப் ஆண்டனி, 2024ல் பூஜா சக்தியை திருமணம் செய்து ஒரு ஆண் குழந்தை இருக்கும் நிலையில் விவாகரத்து முடிவு குறித்து பேசியுள்ளது பலருக்கும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது.

நான் என் மனைவி பூஜாவை விவாகரத்து செய்யவில்லை!! பிரதீப் ஆண்டனி ஓபன் டாக்.. | Pradeep Antony Reveals His Divorce Issues

பிரதீப் ஆண்டனி

பிக்பாஸ் சீசன் 7ல் போட்டியாளராக கலந்து கொண்டவர் தான் பிரதீப் ஆண்டனி. பிக்பாஸ் சீசன் 3ல் கவினின் நண்பராக உள்ளே வந்து கன்னத்தில் பலார்விட்ட பிரதீப், பல படங்களில் பணியாற்றி வந்தார்.

அதன்பின் பிக்பாஸ் சீசன் 7ல் கலந்து கொண்டு சில சர்ச்சையான சம்பவத்தால் ரெட் கார்ட் கொடுக்கப்பட்டு வீட்டைவிட்டு வெளியேறினார். அதன்பின் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற பிரதீப், மிஸ்டர் அண்ட் மிஸஸ் ஆபிஸ் நிகழ்ச்சியில் முக்கிய ரோலில் நடித்தார்.

நான் என் மனைவி பூஜாவை விவாகரத்து செய்யவில்லை!! பிரதீப் ஆண்டனி ஓபன் டாக்.. | Pradeep Antony Reveals His Divorce Issues

இந்நிலையில் தனது மனைவி பூஜா சக்தியை பிரிவதாக கூறி அதிர்ச்சியை கொடுத்தார். தற்போது, அதுகுறித்து பேசியிருக்கிறார் பிரதீப் ஆண்டனி.

விவாகரத்து செய்யவில்லை

அதில், நான் பொதுவாக எமோஷனை வெளிப்படுத்தி போஸ்ட் போடுவது இயல்புதான். அந்த சமயத்தில் பொருளாதார பிரச்சனை இருந்தது.

நான் என் மனைவி பூஜாவை விவாகரத்து செய்யவில்லை!! பிரதீப் ஆண்டனி ஓபன் டாக்.. | Pradeep Antony Reveals His Divorce Issues

அப்போது என் மனைவி என்கூட நிக்கலன்னு கோவத்தில் அந்த போஸ்ட்டை போட்டுட்டேன். அது பெருசாகிவிட்டது. இப்போது எல்லாம் சரியாகிவிட்டது, பிரச்சனை ஏதும் இல்லை.

ஆனால் தனித்தனியாக தான் இருக்கிறோம், வேலை காரணத்தால். நான் பிரிஞ்சிடலாம் என்று தான் நினைச்சேன், ஆனால் மனைவி ரொம்ப லவ் பண்ணுறாள், அவள் என்னை விடத் தயாராக இல்லை என்று பிரதீப் ஆண்டனி தெரிவித்துள்ளார்.