உதவியாளருக்காக சர்ப்ரைஸ் கொடுத்த Dude பட நடிகர் பிரதீப்.. எமோஷ்னல் வீடியோ!

Viral Video Pradeep Ranganathan Tamil Actors
By Bhavya Oct 16, 2025 02:30 PM GMT
Report

பிரதீப் ரங்கநாதன்

லவ் டுடே படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமாகி, முதல் படத்திலேயே ரூ. 100 கோடி வசூல் நாயகனாக மாறினார் பிரதீப் ரங்கநாதன். இதை தொடர்ந்து இவர் நடித்த டிராகன் படமும் ப்ளாக் பஸ்டர் வெற்றியடைந்தது.

உதவியாளருக்காக சர்ப்ரைஸ் கொடுத்த Dude பட நடிகர் பிரதீப்.. எமோஷ்னல் வீடியோ! | Pradeep Gift To His Helper Goes Trending

எமோஷ்னல் வீடியோ! 

இந்நிலையில், பிரதீப்பின் உதவியாளர் சேகர் பதிவிட்டுள்ள வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

அதாவது, டிராகன்' திரைப்படத்தின் 100வது நாள் விழாவில் அனைவருக்கும் நினைவு பரிசு வழங்கப்பட்டது. அன்றைய தினம் பிரதீபின் உதவியாளருக்கு அது வழங்கப்படாமல் தவறி விட்டது.

அதனை மனதில் வைத்து கொண்டு சேகருக்காக கேக் வெட்டி பிரதீப் ஸ்பெஷலாகக் கொண்டாடியிருக்கிறார். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதோ,