மாபெரும் வரவேற்பு!! வசூலை வாரிக்குவிக்கும் டிராகன்.. எத்தனை கோடி தெரியுமா
Pradeep Ranganathan
Box office
Dragon
By Kathick
வளர்ந்து வரும் சென்சேஷனல் ஹீரோக்களில் ஒருவரான பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த திரைப்படம் டிராகன். இப்படத்தை இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து இயக்கியிருந்தார்.
இப்படம் மாபெரும் அளவில் மக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது. இந்த நிலையில், இப்படம் உலகளவில் 2 நாட்களில் செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதை பற்றி பார்க்கலாம் வாங்க.
முதல் நாள் முடிவில் இப்படம் உலகளவில் ரூ. 10 கோடி வசூல் செய்தது. அதன்பின் இரண்டாவது நாளில் ரூ. 15 கோடி வசூல் செய்துள்ளது. இதன்மூலம் மொத்தமாக இரண்டு நாட்களில் ரூ. 25 கோடிக்கும் மேல் இப்படம் வசூல் செய்து மாஸ் காட்டியுள்ளது.
கண்டிப்பாக இப்படம் ரூ. 100 கோடிக்கும் மேல் வசூல் செய்யும் என திரை வட்டாரத்தில் எதிர்பார்க்கப்படுகிறது. பொறுத்திருந்து பார்ப்போம் என்ன நடக்கப்போகிறது என்று.