டிராகன் படத்திற்காக பிரதீப் ரங்கநாதன் வாங்கிய சம்பளம்.. எவ்வளவு தெரியுமா
தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் சென்சேஷனல் நடிகர்களில் ஒருவர் பிரதீப் ரங்கநாதன். கோமாளி திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமானார். முதல் படமே மாபெரும் வெற்றியாக இவருக்கு அமைந்தது.
இதை தொடர்ந்து லவ் டுடே படத்தில் இயக்குநராக மட்டுமின்றி ஹீரோவாகவும் என்ட்ரி கொடுத்து, ப்ளாக் பஸ்டர் வெற்றியை பதிவு செய்தார். இப்படம் உலகளவில் ரூ. 100 கோடிக்கும் மேல் வசூல் செய்தது. லவ் டுடே படத்தின் வெற்றிக்கு பின் LIK மற்றும் டிராகன் என இரண்டு திரைப்படங்களை கமிட் செய்தார்.
இதில் இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவான படம்தான் டிராகன். இப்படத்தில் பிரதீப் உடன் இணைந்து அனுபமா பரமேஸ்வரன், கயடு லொகர், மிஸ்கின், கவுதம் மேனன் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். இன்று திரையரங்கில் வெளிவந்துள்ள இப்படம் மக்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
இந்த நிலையில், டிராகன் படத்திற்காக ஹீரோ பிரதீப் ரங்கநாதன் வாங்கிய சம்பளம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படத்திற்காக பிரதீப் ரூ. 15 கோடி முதல் ரூ. 18 கோடி வரை சம்பளம் வாங்கியுள்ளார் என சொல்லப்படுகிறது.