தெரிந்து செய்தாலும் இல்லைனாலும் தவறு தவறு தான்.. மன்னிப்பு கேட்ட பிரகாஷ் ராஜ்!
பிரகாஷ் ராஜ்
கன்னடத்தில் 1988ம் ஆண்டு வெளியான மிதிலேய சீதேயரு படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகர் பிரகாஷ் ராஜ். தொடர்ந்து கன்னடத்தில் நடித்து வந்தவர் டூயட் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.
தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் பல படங்களில் நடித்து அசத்தியுள்ளார்.
நடிப்பில் சிறந்த விளங்கிய இவர் மணிரத்னம் இயக்கத்தில் மோகன்லால், பிரகாஷ் ராஜ் நடித்து வெளியான இருவர் படத்துக்கு சிறந்த துணை நடிகருக்கான தேசிய விருதை வென்றார்.
காஞ்சிவரம் படத்தில் நடித்த பிரகாஷ் ராஜ் சிறந்த நடிகருக்கான தேசிய விருதை வென்றார்.

தவறு தான்!
இந்நிலையில், ஆன்லைன் சூதாட்ட செயலிகளை விளம்பரப்படுத்தியதற்காகவும், அவற்றில் முதலீடு செய்ய மக்களைத் தூண்டியதற்காகவும் திரைப்பட நடிகர்கள் ராணா டகுபதி, பிரகாஷ் ராஜ் என 29 பேர் மீது தெலுங்கானா போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.
இந்த வழக்கு தொடர்பாக பிரகாஷ் ராஜ் போலீசாரிடம் ஆஜரானார். அதன் பின் பேசிய பிரகாஷ் ராஜ் 2016-ம் ஆண்டு ஒரு சூதாட்ட செயலிக்காக பிரமோஷன் செய்தேன்.
அந்த செயலி 2017-ம் ஆண்டு சூதாட்ட செயலியாக மாறியது. இதையடுத்து எனது ஒப்பந்தத்தை நான் ரத்து செய்தேன். தெரிந்து செய்தாலும் தெரியாமல் செய்தாலும் தவறு தவறுதான். எனவே இதற்காக நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.
