விஜய்க்கு பயந்த நடிகை திரிஷா!! இயக்குநர் சொன்ன ரகசியம்..
இயக்குநர் பேரரசு
தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநராக திகழ்ந்து வருபவர் தான் இயக்குநர் பேரரசு. நடிகர் விஜய்யை வைத்து திருப்பாச்சி, சிவகாசி போன்ற படங்களையும் அஜித்தை வைத்து திருப்பதி படத்தையும் இயக்கி பிரபலமானார்.

கடைசியாக தமிழில் அவர் இயக்கத்தில் திருத்தனி படம் ரிலீஸானது. இதனையடுத்து ஒருசில படங்களில் நடித்தும் வருகிறார் இயக்குநர் பேரரசு.
விஜய் - திரிஷா
இந்நிலையில் சமீபத்தில் அவர் அளித்த பேட்டியொன்றில், திருப்பாச்சி படத்தில் நடந்த சில அனுபவங்களை பகிர்ந்து கொண்டுள்ளார்.
அதில், திருப்பாச்சி பட ஷூட்டிங் சமயத்தில் விஜய்யை வாடா போடான்னு சொல்ல திரிஷா பயந்துவிட்டார்கள். அவர் எவ்வளவு பெரிய நடிகர், அவருக்கு எவ்வளவோ ஃபேன்ஸ் இருக்காங்க, அப்படி பேச மாட்டேன்னு சொல்லிட்டாங்க.

டயலாக் மாத்தலாமான்னு கேட்டாங்க, அதன்பின் விஜய் சார்தான் வந்து இப்படி பேசுங்க, ரசிகர்கள் என்ஜாய் பண்ணுவாங்க என்று சொன்னார் என பேரசு தெரிவித்துள்ளார்.