ஸ்லிம்மாக இருக்க ஊசி போடுகிறேனா?.. உண்மையை உடைத்த நடிகை தமன்னா!

Tamannaah Tamil Cinema Actress
By Bhavya Nov 13, 2025 06:30 AM GMT
Report

தமன்னா

கோலிவுட், டோலிவுட், பாலிவுட் என இந்திய அளவில் கலக்கிக்கொண்டிருக்கும் நடிகைகளில் ஒருவர் தமன்னா. இவர் நடிப்பில் சமீபத்தில் Do You Wanna Partner என்ற வெப் தொடர் வெளிவந்தது.

ஆனால், இந்த வெப் தொடருக்கு பெரிதளவில் வரவேற்பு கிடைக்கவில்லை. தமன்னா நடிப்பில் அடுத்ததாக ரோமியோ, ரேஞ்சர், Vvan, ரோஹித் ஷெட்டியின் படம் என நான்கு திரைப்படங்கள் உருவாகி வருகின்றன.

முன்பு உடல் எடை கூடி காணப்பட்ட தமன்னா தற்போது உடல் எடை குறைத்து காணப்படுகிறார். இதனால் இவர் ஸ்லிம்மாக இருக்க ஊசி போடுவதாக தொடர்ந்து தகவல் வெளியாகும் நிலையில், இது குறித்து தமன்னா விளக்கம் கொடுத்துள்ளார்.

ஸ்லிம்மாக இருக்க ஊசி போடுகிறேனா?.. உண்மையை உடைத்த நடிகை தமன்னா! | Tamannaah About Her Body Gaining Details

ஊசி போடுகிறேனா?

அதில், " நான் ஸ்லிம்மாக இருக்க ஊசி போடுவதாக வரும் தகவல் எதுவும் உண்மை இல்லை. என் சினிமா வாழ்க்கை தொடக்கத்தில் எப்படி இருந்தேனோ அப்படி தான் இப்போதும் இருக்கிறேன்.

எனக்கு நான் புதிதாகத் தெரியவில்லை. பொதுவாக பெண்களின் உடல் 5 வருடங்களுக்கு ஒரு முறை மாறும், அப்படி தான் நானும்" என்று தெரிவித்துள்ளார்.  

ஸ்லிம்மாக இருக்க ஊசி போடுகிறேனா?.. உண்மையை உடைத்த நடிகை தமன்னா! | Tamannaah About Her Body Gaining Details