பிறந்தநாள் முடிந்த மூன்றே நாளில் அம்மா மரணம்!! பிரகாஷ் ராஜின் எமோஷனல் பதிவு..

Prakash Raj Actors Death Tamil Actors
By Edward Apr 01, 2026 11:30 AM GMT
Report

பிரகாஷ் ராஜின் தாயார்

இந்திய சினிமாவில் சிறந்த நடிகராகவும், வில்லனாகவும் திகழ்ந்து வருபவர் தான் நடிகர் பிரகாஷ்ராஜ். முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து பிரபலமான பிரகாஷ் ராஜின் தாயார், ஸ்வர்ணலதா உடல்நலக்குறைவால் சில நாட்களுக்கு முன் மரணமடைந்தார். அவருக்கு வயது 86.

பிறந்தநாள் முடிந்த மூன்றே நாளில் அம்மா மரணம்!! பிரகாஷ் ராஜின் எமோஷனல் பதிவு.. | Prakash Raj Emotional Thanks Mother Death

கடந்த சில நாட்களாக வயது முதிர்வு தொடர்பான உடல்நலப் பிரச்சனைகளால் அவதிப்பட்டு வந்த ஸ்வர்ணலதா மார்ச் 29 ஆம் தேதி உயிரிழந்தார். பிரகாஷ் ராஜின் சினிமா மட்டுமில்லாமல் தனிப்பட்ட வாழ்க்கையிலும் ஸ்வர்ணலதா ஒரு முக்கியப் பங்காற்றினார்.

பிறந்தநாள் முடிந்த மூன்றே நாளில் அம்மா மரணம்!! பிரகாஷ் ராஜின் எமோஷனல் பதிவு.. | Prakash Raj Emotional Thanks Mother Death

ஸ்வர்ணலதா

கர்நாடகாவின் ஹூப்ளியிலுள்ள ஒரு ஆதரவற்ற இல்லத்தில் வளர்ந்த ஸ்வர்ணலதா, செவிலியர் படிப்பை முடித்து பெங்களூரு மருத்துவமனையில் வேலை பார்த்தார். அதே மருத்துவமனையில் தான் பிரகாஷின் தந்தையை சந்தித்து காதலித்து திருமணம் செய்துள்ளார். இவர்களுக்கு பிரகாஷ் ராஜ் உட்பட 3 குழந்தைகள். பலமுறை நடிகர் பிரகாஷ் ராஜ், தனது தாயின் அசைக்க முடியாத ஆதரவு, அன்பு, வழிகாட்டுதல், உக்கம் எல்லாம் தன்னுடைய சாதனைகளுக்கு அடித்தளம் என்று கூறியிருப்பார்.

பிறந்தநாள் முடிந்த மூன்றே நாளில் அம்மா மரணம்!! பிரகாஷ் ராஜின் எமோஷனல் பதிவு.. | Prakash Raj Emotional Thanks Mother Death

இந்நிலையில் பிரகாஷ் ராஜின் தாயார் மறைவுக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட பலர் ஆழ்ந்த இரங்கலை அறிவித்தனர். தற்போது தனக்கு ஆறுதல் கூறிய அனைவருக்கும் நன்றி என்றும் அனைத்தும் நன்றி அம்மா, லவ் யூ, மிஸ் யூ என்று கூறி ஒரு பதிவினை பகிர்ந்துள்ளார் பிரகாஷ் ராஜ்.