என்ன இது வெட்கமில்லாத பழிவாங்குதல்!! யூடியூபர் கைதால் கொந்தளித்த பிரகாஷ் ராஜ்...
பிரஸ்ன ராவணன்
கடந்த மாதம் ஏலூரில் நடந்த பொதுக்கூட்டத்தில் யூடியூபர் பிரஸ்ன ராவணன், ஆந்திராவிலும் முதல்வர் சந்திரபாபு நாயுடு, துணை முதலமைச்சர் பவன் கல்யாணை கடுமையாக விமர்சித்து பேசியிருந்தார். இதுகுறித்து வந்த புகாரின் அடிப்படையில் ஆந்திரா போலிசார், ஹைதராபாத்தில் நள்ளிரவில் பிரஸ்ன ராவணனை அதிரடியாக கைது செய்தனர்.
போலீசார் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போது, இவ்வழக்கில் கைது செய்யமுடியாது என்று நீதிமன்றம் அவருக்கு உடனடியாக ஜாமீன் வழங்கியது, ஆனால் அவர் ஜெயிலில் இருந்து வெளியே வந்த சில மணி நேரத்தில், மற்றொரு வழக்கில் கைது செய்யப்பட்டார்.

அதிலும் நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்து ஜாமீன் வழங்கிய நிலையில், தற்போது மச்சிலிப்பட்டினம், குடிவாடா என ஆந்திராவின் பல மாவட்ட போலிசாரும் பிரஸ்ன ராவணன் மீது அடுத்தடுத்து புதுப்புது வழக்குகளை பதிவு செய்து கைது செய்தனர். இந்த சம்பவத்தை எதிர்த்து பலரும் தங்கள் கருத்துக்களை தெரிவித்து வரும் நிலையில், நடிகர் பிரகாஷ் ராஜ் தன்னுடைய விமர்சனத்தை முன் வைத்துள்ளார்.
வெட்கமில்லாத பழிவாங்குதல்
ஹைதராபாத்தில் நள்ளிரவில் கைது செய்து பெரிய பில்டப் கொடுத்து ஆந்திர பிரதேசத்திற்கு கூட்டிட்டு போனாங்க, இவ்வழக்கில் கைது செய்ய முடியாது என்று கூறி நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. உடனே வேறொரு வழக்கு போட்டு கைது செய்தீங்க, அப்போதும் நீதிமன்றம் இது சரியல்ல என்று கூறி ஜாமீன் வழங்கியது.

மறுபடியும் இன்னொரு வழக்கு கைது செய்வார்களா? இப்படி ஒரு 30 வழக்குகள் தயாராக இருக்கிறதாமே? ஜாமீன் கொடுத்தால் கைது செய்வதற்கு, நீதிமன்றம் மீண்டும் மீண்டும் நீங்கள் தவறு செய்கிறீர்கள்.
இப்படி கைது செய்ய முடியாது என்று கூறியும், இன்னும் 30 வழக்குகள் நீங்கள் போட்டு அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி, இன்னும் எவ்வளவு தூரம் போவீங்க. என்ன இது? வெட்கமில்லாத பழிவாங்கும் நடவடிக்கை, இன்னும் என்ன செய்ய நினைக்கிறீங்க? மக்கள் பார்த்துக் கொண்டு இருக்கிறார்கள்.
மக்கள் விரக்தியில் இருக்கிறார்கள், எல்லாத்தையும் கவனித்து கொண்டுதான் இருக்கிறார்கள், நீங்கள் அதிகாரத்தை இப்படி தவறாக பயன்படுத்த முடியாது. அவரை விரைவில் விடுதலை செய்வீங்கன்னு நம்புகிறேன் என்று கூறியிருக்கிறார்.